தொலைந்து போன வளர்ப்பு நாய் 3 ஆண்டுகளுக்கு பிறகு வந்து சேர்ந்த அதிசயம் - உதவிய மைக்ரோ சிப்!
தொலைந்து போன வளர்ப்பு நாய் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன நாய்
நன்றியுள்ள செல்லப்பிராணி என்பது நாய் தான். இதனை வளர்க்கக் கூடிய உரிமையாளர்களுக்கு அளவு கடந்த அன்பை நாய்கள் கொடுக்கும். யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் நாய்கள் வல்லவர்கள்.
ஆனால் அந்த செல்லப் பிராணிகள் காணாமல் போய் விட்டால் அது உரிமையாளர்களுக்கு அதிகப்படியான வேதனையை கொடுக்கும். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள மெக்கின்னி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரிட்னி ஸ்மித் மற்றும் ரெக்ஸ். இவர்கள் ஜில் என பெயரிடப்பட்ட பிட்புள் நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த நாய் தொலைந்து போயுள்ளது.
இதனால் அந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களிலும் ஜில்லை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களிலும் நாயின் புகைப்படத்தை பதிவிட்டு தேடி வந்துள்ளனர். ஆனாலும் நாய் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த நாயின் மீது ஒரு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருந்தது.
கண்டு பிடிப்பு
இந்நிலையில் 3 ஆண்டுகள் கழித்து அண்மையில் ஸ்மித் குடும்பத்தினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவர்களது நாய் ஜில் இருக்கும் இடத்தை பற்றிய தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்து சென்று தங்களது நாயை குடும்பத்தினர் மீட்டனர்.
நாயின் மீது பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப் உதவியுடன் கடந்த மூன்று ஆண்டுகள் தேடும் பணி தீவிரமாக நடந்த நிலையில் இப்போது நாய் மீண்டும் கிடைத்ததால் ஸ்மித்தின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாய் ஜில்லுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.