போலீசுக்கு பயந்து 7வது மாடியில் இருந்து குதித்த குடும்பம் - கடைசியில் நடந்த விபரீதம்

switzerland familyplungesfrombalcony masssuicide
By Petchi Avudaiappan Mar 25, 2022 05:25 AM GMT
Report

சுவிட்சர்லாந்து நாட்டில் போலீசுக்கு பயந்து 7வது மாடியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மோன்ட்ரீயுக்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7வது மாடியில் 51 வயதை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி , மகன் , மகள் மற்றும் மனைவியின் சகோதிரியுடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே சில தினங்களுக்கு முன்  குற்ற வழக்கில் ஈடுபட்டதாக கூறி குடும்பத்தின் தலைவரை போலீசார் கைது செய்ய வாரண்ட்டுடன் சென்றுள்ளனர். 

போலீசார் வருவதை அறிந்த அந்த குடும்பத்தினர் கதவை திறக்காமல் இருக்கும்படி செய்துவிட்டு மொத்தமாக  அனைவரும் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 5 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.