Nepal Flood: உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைக்கப்பெறாததால் உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர்.
நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரசுவா உட்பட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் உள்ளூர், வெளிநாட்டு பயணிகள் சிக்கிக்கொண்டனர், இதுவரையிலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் பலரது சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது, 4 ஆயிரம் பேரை காணவில்லை, அவர்களுக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
இந்நிலையில் இன்று காத்மாண்டு பசுபதிநாத் கோவில் வளாகத்தில் உருவ பொம்மைகளுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
காணாமல் போனோரின் உடல்கள் கிடைக்காத நிலையில் அவர்களின் உருவ பொம்மைகளுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு அனைவரின் கண்களை குளமாக்கியது.
குகைக்குள் குழந்தையுடன் மீட்க்கப்பட்ட 15 வயது சிறுமி - புகைப்படங்களை பகிர்ந்தவர்களுக்கு சிக்கல் IBC Tamil
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil
தந்தையால் தயாரிக்கப்பட்ட வினாத்தாளால் அரச பரீட்சையில் அகில இலங்கையில் முதலிடம் பெற்ற பிள்ளை IBC Tamil