உலகிலேயே அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் குடும்பம் - மிரளவைக்கும் மதிப்பு
உலகின் செல்வாக்கு மிக்க குடும்பம் எது தெரியுமா?
அதிக செல்வாக்கு
மூன்றாம் சார்லஸ் மன்னர் தலைமையிலான பிரிட்டிஷ் அரச குடும்பம்தான் அது. உலகின் தோராயமாக 16% நிலப்பரப்பைத் தன்வசம் வைத்திருக்கிறார்கள் இவர்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் பண்ணைகள் நிலங்கள்,

காடுகள், நகரஙகளில் பல்வேறு வீடுகள் அடங்கிய சொத்துக்கள் மற்றும் கடற்கரைகளும் உள்ளன. அனைத்தும் 'தி கிரவுன் எஸ்டேட்' (The Crown Estate) என்ற நிறுவனத்தின் மூலம் உலகளவில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, பிரிட்டிஸ் அரச குடும்பம் நேரடியாக 250,000 ஏக்கர் நிலத்தை இரண்டு 'ராயல் டச்சிகள் மூலம் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறது. மொத்தம் 115,000 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ளன. இதுதவிர சில்லறை விற்பனை நிலையங்கள்,

குடியிருப்புகள் மற்றும் அலுவலக இடங்கள் உள்ளிட்ட நகர்ப்புற நிலங்கள் உள்ளன. 'டச்சி ஆஃப் லான்காஸ்டர்' என்ற 18,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தனியார் எஸ்டேட்டும் பிரிட்டிஸ் அரச குடும்பத்திற்கு உள்ளது. மத்திய லண்டனில் உள்ள இதன் மதிப்பு சுமார் £654 மில்லியன்.
இந்திய மதிப்பில் 7884 கோடியாகும். இது ஆண்டுக்கு சுமார் £20 மில்லியன் வருமானத்தை ஈட்டுகிறது. பிரிட்டிஷ் முடியாட்சியின் உலகளாவிய சொத்துக்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் $15.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, நில உரிமையில் சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா இரண்டாம் இடத்தில் உள்ளார்.