குடிபோதையில் தகராறு செய்த சகோதரை கொன்று புதைத்த குடும்பத்தினர் - மாங்காட்டில் பரபரப்பு
மாங்காட்டில் குடி போதையில் தகராறு செய்த தம்பியை கழுத்து நெரித்து கொலை விட்டு இறந்து விட்டதாக நாடகமாடிய தாய் - இரண்டு மகன்கள் கைது. உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு.
மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், சோழன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவில்ராஜ்(25), குடி பழக்கமுடைய இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து அவரது வீட்டில் உள்ள தாய் மற்றும் அண்ணன்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த கோவில்ராஜ் வழக்கம்போல் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டின் வெளியே சென்று படுத்துக் கொண்டார்.
இதையடுத்து நேற்று காலை எழுந்து பார்த்தபோது கோவில்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது அண்ணன்கள் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் முன்னிலையில் கோவில்ராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது நண்பர் அளித்த புகாரின் பேரில் அவரது தாய் சாராள் (50), இரண்டு மகன்கள் மதன்ராஜ் (25), மைக்கேல்ராஜ் (27) ஆகிய இருவரும் சேர்ந்து குடிபோதையில் தனது தம்பி தினமும் வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததால் ஆத்திரம் தாங்க முடியாமல் வீட்டிற்க்கு வெளியே படுத்திருந்த கோவில்ராஜின் கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவர் குடிபோதையில் இறந்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிபதி மற்றும் ஆர்.டி.ஓ. முன்னிலையில் புதைக்கப்பட்ட கோவில்ராஜ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து கோவில்ராஜ் புதைக்கப்பட்ட சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குடிபோதையில் தகராறு செய்த மகனை தாய் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.