காதலுக்கு எதிர்ப்பு.. காதலுனுடன் சேர்ந்து தந்தையை போட்டுதள்ளிய குடும்பம் - இறுதியில் ஆடிய நாடகம்!
தந்தை காதலை எதிர்த்ததால் குடும்பமே சேர்ந்து பிளான் போட்டு கொலை செய்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் தலையால்நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் காளிமுத்து. இவரது மகன் செல்வக்குமார், 43 வயதான இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு கார்த்திகா (23), சுதர்ஷினி (19) ஆகிய மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மொட்டைமாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து செல்வக்குமார் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். அப்பொழுது அங்கு வந்த உறவினர்கள் அவரது உடலில் சில காயங்கள் இருப்பதனை கண்டனர். இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குடும்பத்தினரிடம் தனி தனியே விசாரணை நடத்தியபொழுது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இறந்தவரின் மனைவி வாக்குமூலம் அளித்தார், அதில் "எனது மூத்த மகள் கார்த்திகாவும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கந்தவேல் என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செல்வக்குமார், கார்த்திகாவை கண்டித்தார். மேலும், எனது நடத்தையில் சந்தேகப்பட்டு என்னிடமும் தகராறு செய்து வந்தார். இதனால் நாங்கள் வாழ்வதைவிட சாவதே மேல் என நினைத்து கந்தவேலிடம் கூறினோம். அவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதன்படி கடந்த 26-ம் தேதி இரவில் மதுபோதையில் வந்த செல்வக்குமார் உணவு சாப்பிட்டு விட்டு மொட்டைமாடியில் தூங்கினார்.
பின்னர் நான், எனது மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி மற்றும் கந்தவேல் மொட்டை மாடிக்கு சென்றோம். மகள்கள் 2 பேரும் செல்வக்குமாரின் கை, கால்களையும், தலையை கந்தவேலும் பிடித்துக் கொண்டனர்.
அருகில் கிடந்த தலையணையை எடுத்த நான் எனது கணவர் செல்வக்குமாரின் முகத்தில் வைத்து அமுக்கினேன். அவர் சத்தம் போட்டதால் அருகில் கிடந்த துணியை எடுத்து வாயில் திணித்தோம். இதில் அவர் இறந்து விட்டார்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் 4 போரையும் கைது செய்தனர்.