ஏசி வெடித்ததால் குடும்பமே தீயில் கருகி பலியான சோகம்
கார்டாகவில் ஏசி வெடித்ததில் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் மாரியம்மனஹள்ளி கிராமத்தில் வீட்டில் உள்ள AC வெடித்து தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
AC வெடித்ததால் விஷ வாயு கசிந்தததா? அல்லது தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தார்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ஏசியில் இருந்து வாயு கசிந்ததால் தீ பரவி, மின்கசிவு ஏற்படுத்தியதால் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் வெங்கட் பிரசாந்த், அவரது மனைவி டி.சந்திரகலா , அவர்களின் 6 வயது மகன் ஆத்விக் மற்றும் 8 வயது மகள் பிரேரனா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.