கொரோனாவால் வாழ்வாதாரம் முடங்கிவிடுமோ என பயந்து விஷம் அருந்தி தற்கொலை ; மூன்று வயது குழ்நதை உள்பட இருவர் உயிரிழப்பு
கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் மூன்று வயது குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்ஸிசன் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் மதுரையில் கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் மூன்று வயது குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் கல்மேடு அருகே உள்ள எம்.ஜி.ஆர் காலனி பகுதியை சேர்ந்த லட்சுமி கணவனை இழந்த நிலையில் தன்னுடைய மகள் , மகன், மற்றும் பேரனுடன் இந்த பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் மூத்தமகள் ஜோதிகாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று வந்துவிடும் வாழ்வாதாரம் முடங்கிவிடும் என்ற அச்சத்தில்,
லட்சுமி(46) அவரது மகளான கொரோனா பாதிக்கப்பட்ட ஜோதிகா (23)மற்றும் அவரது சகோதரரான சிபிராஜ்(13), ஜோதிகாவின் மகனான ரித்தீஷ்(3) ஆகிய நான்கு பேரும் சாணிபவுடர் விஷத்தை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
இதில் கொரோனா பாதிக்கப்பட்ட ஜோதிகா மற்றும் அவரது மகனான 3 வயது குழந்தை ரித்தீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்
ஜோதிகாவின் தாய் லட்சுமி மற்றும் சகோதரர் சிபிராஜ் ஆகிய இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிலைமான் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து தற்கொலை குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.
கொரோனா அச்சத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தில் அதில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.