பார்வை இழக்கவிருக்கும் குழந்தைகள் - உலக சுற்றுலா கூட்டிச் சென்ற பெற்றோர்

Eye Problems Tourism Canada
By Sumathi Sep 14, 2022 12:47 PM GMT
Report

கண் பார்வையை இழக்கவிருக்கும் குழந்தைகளை, அவர்களது பெற்றோர் உலக சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

கண் பார்வை

கனடாவை சேர்ந்தவர்கள் செபாஸ்டியன் பெல்டியர்- எடித் லேமே தம்பதி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அதில் மூன்று பேர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பார்வை இழக்கவிருக்கும் குழந்தைகள் - உலக சுற்றுலா கூட்டிச் சென்ற பெற்றோர் | Family Goes On A World Tour Their Their Kids

இது மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றம். கண்களின் வெள்ளை விழிப்பகுதி மொத்தமாக பாதிக்கப்படும். இதற்கு முழுமையாக சிகிச்சை இல்லை. இவர்களின் மூத்த குழந்தையான மியாவுக்கு 3 வயதாக இருந்தபோது பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன.

பாதித்த குழந்தைகள் 

அவர்களின் மற்ற குழந்தைகளான கொலின் (7) மற்றும் லாரன்ட் (5) அதே பாதிப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 9 வயதாக இருக்கும் லியோ மட்டுமே இந்த பாதிப்பில் இருந்து தப்பித்துள்ளார்.

பார்வை இழக்கவிருக்கும் குழந்தைகள் - உலக சுற்றுலா கூட்டிச் சென்ற பெற்றோர் | Family Goes On A World Tour Their Their Kids

இதனால் அவர்களின் குடும்பம் மொத்தமாக உலகத்தை சுற்ற முடிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் பயணத்தை தொடங்கியுள்ளனர். பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். விரைவில் இந்தோனேசியா.

உலக சுற்றுலா

அதன்பின் ரஷ்யா, சீனா, இந்தியாவிற்கு வரும் முடிவில் உள்ளனர். இது குறித்து இந்த தம்பதி கூறுகையில், "நீங்கள் உண்மையில் எதுவும் செய்ய முடியாது. இந்த பாதிப்பு எவ்வளவு வேகமாகப் போகிறது என்று எங்களுக்குத் தெரியாது.

ஆனால் அவர்கள் வாழ்க்கையின் நடுப்பகுதியில் முற்றிலும் பார்வையற்றவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நான் அவர்களுக்கு ஒரு புத்தகத்தில் யானையைக் காட்டப் போவதில்லை, உண்மையான யானையைப் பார்க்க அவர்களை அழைத்து செல்லப் போகிறேன்.

அவளுடைய காட்சி நினைவில் என்னால் இயன்ற சிறந்த, அழகான படங்களால் நிரப்பப் போகிறேன்" என தெரிவித்தனர்.