குடும்பத்தகராறில் மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!

Murder Family dispute Mother-in-law
By Thahir Jul 18, 2021 11:58 AM GMT
Report

நெல்லை அருகே குடும்ப தகராறில் செவிலியரை வெட்டிக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

குடும்பத்தகராறில் மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்! | Family Dispute Mother In Law Murder

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு, மூலைக்கரைப்பட்டி கல்லத்தியை சேர்ந்த அபிமன்யு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், ராஜலட்சுமிக்கும், அவரது மருமகன் அபிமன்யுவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு அபிமன்யு, மாமியார் ராஜலட்சுமியின் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதில், ஆத்திரமடைந்த அபிமன்யு, ராஜலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அபிமன்யுவை கைது செய்தனர்.