தீயில் கருகி பலியான குடும்பம்: தாயை அணைத்தபடி எலும்புக்கூடாக பிள்ளைகள்
கடன் தொல்லையால் காருக்குள் இருந்தபடியே பெட்ரோல் ஊற்றி ஒட்டுமொத்த குடும்பமும் தன் உயிரை மாய்த்து கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
நெல்லையின் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அதிகாரிகள் காரை பார்வையிட்ட போது, முன் இருக்கையில் ஒருவரும் பின் இருக்கையில் 3 பேரும் எலும்புக்கூடுகளாக இருந்தனர்.
நால்வரின் உடல்களை மீட்ட பொலிசார் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் யார் என விசாரணை தொடங்கியது, காரின் எண்ணை வைத்து விசாரணை செய்ததில் சென்னை நந்தம்பாக்கம் பெரியார்நகர் பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகமது ரபி என்பது தெரியவந்தது.
கார் ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார், அவரது மனைவி நஸ்ரின் பாத்திமா, மகள் அப்ரின் பாத்திமா(வயது 15), மகன் முகமது காஜா(வயது 13). கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ரபி, சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த வீட்டை விற்றுள்ளார்.
எனினும் கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் கடந்த 13ம் தேதி சென்னையிலிருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் பெட்டைகுளம் கிராமத்தில் இருந்து பள்ளிவாசல் செல்லும் சாலையோரம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு கதவுகளை பூட்டிவிட்டு பெட்ரோலை எடுத்து தனது மீதும், குடும்பத்தினர் மீதும் ஊற்றியுள்ளார் ரபி.
தொடர்ந்து தீ வைத்ததில் நான்கு பேரும் உடல் கருகி பலியாகினர், தாயாரை அணைத்தபடி இருந்த பிள்ளைகளின் சடலம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.