அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் நடந்த திருட்டை தடுத்த குடும்பம்

kanpurtheft americafamily cctvalert
By Petchi Avudaiappan Jan 20, 2022 04:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடும்பம் இந்தியாவில் உள்ள அவர்களது வீட்டில் நடந்த திருட்டை தடுத்துள்ள சம்பவம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் இன்ஜினியர் விஜய் அஸ்வதிக்கு கான்பூரில் பூர்வீக சொத்தான வீடு உள்ளது. தான் இந்தியா வந்தால் தங்கி செல்வதற்காக வைத்துள்ள இந்த வீட்டின் அருகில் உள்ள இரு சகோதரிகள் இதனை பராமரித்து வருகின்றனர். 

இந்த வீட்டில் விஜய் அஸ்வதி சிசிடிவி கேமராக்களை மாட்டியுள்ளார். அமெரிக்காவிலிருந்தே தன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது அவர் பார்ப்பது வழக்கம்.. மேலும் தன் வீட்டில் ஏதாவது அசைவுகள் தென்பட்டால் உடனடியாக தனது செல்போனிற்கு அலார்ட் வரும் படி செட் செய்திருந்தார்.இதனிடையே  கடந்த திங்கட்கிழமை இவரது செல்போனிற்கு அலார்ட் மெசெஜ் வந்துள்ளது.

உடனடியாக தன் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது வீட்டின் உள்ளே திருடர்கள் சிலர் புகுந்திருப்பது தெரியவந்தது.  உடனடியாக அவர் அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு அலார்ட் செய்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்தனர். போலீசார் வந்தது தெரிந்ததும் திருடர்கள் தப்பியோட முயற்சித்த நிலையில் சோனு என்ற திருடன் மட்டும் சிக்கிக் கொண்டான். 

இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.