‘’ நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே ‘’ : தோழனை தோளில் சுமக்கும் தோழிகள் வைரலாகும் வீடியோ

kerala alif mohamad
By Irumporai Apr 08, 2022 11:24 AM GMT
Report

இரண்டு நாட்களான சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி வாலிபரை, இரண்டு இளம் பெண்கள் தங்களின் தோலில் சுமந்து தூக்கிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த இணையவாசிகள் பலரும் அந்த இளம் பெண்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோவில் உள்ள மூன்று பேரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கேரளாவில் உள்ள சாஸ்தாம்கோட்டை DB கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆலிஃப் முகமது என்பவர்தான் அந்த வாலிபர். மேலும் அதே கல்லூரியில் படிக்கு அவரது தோழிகள் ஆர்யா, அர்ச்சனா ஆகியோர்தான் அவரை தூக்கிச் செல்கின்றனர்.

இந்த நிகழ்வுதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வைரல் வீடியோ குறித்து பேசிய ஆலிஃப் முகமது, "எனக்கு பிறந்ததில் இருந்தே இரண்டு கால்களும் இல்லை. நான் எங்கேயாச்சும் போகணும்னு சொன்னா உடனே என் கல்லூரியில் இருப்பர்கள் என்னை தூக்கிக் கொண்டு செல்வார்கள்.

இதில், ஆண், பெண் பேதம் இல்லாம என்னை அனைவருமே தூக்கிச் செல்வார்கள். அப்படித்தான் எனது தோழிகளான ஆர்யா, அர்ச்சான இருவரும் தூக்கிச் சென்றனர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைநான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. இந்த வீடியோ வைரலானதால் எங்க எல்லோருக்கும் மகிழ்ச்சி. எனக்கு சினிமாவில் நடிக்கணும்னு ஆசை இருக்கு. அதுவும் துல்கருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் எல்லோருக்கும் நாள் ஒரு முன்மாதிரியாக இருக்க ஆசைப்படுகிறேன். யாரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.