அக்காவின் தகாத உறவு..கள்ளக்காதலனின் கதையை முடித்த தம்பி!
காஞ்சிபுரம் அடுத்த சின்ன ஐயங்குளம் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஷீலா மற்றும் மகன் , மகளுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கடந்த பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பே ஷீலாவுக்கு கனகராஜ் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கணவன் வெளியில் வேலைக்கு சென்றவுடன் வீட்டிலேயே ஷீலா கள்ளக்காதலன் கனகராஜ் என்பவருடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனை கணவன் வரதன், கனகராஜ் தன் வீட்டிற்கு வந்து போவதை சில முறை நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மனைவியிடம் வரதன் பலமுறை எடுத்துக் கூறியும் ஷீலா திருந்துவதாக இல்லை, இதனால் கோபமடைந்த வரதன் குழந்தைகளின் நலன் கருதி தனது இரு குழந்தைகளையும், அழைத்துக் கொண்டு தேனம்பாக்கம் பகுதியில் தனியாக வசிக்கத் தொடங்கினார்.
இதனை நல் வாய்ப்பாக எடுத்துக் கொண்ட கனகராஜ் எவ்வித பயமும் இன்றி ஷீலாவுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தற்போது 21 வயதாகும் ஷீலாவின் தம்பி ராஜ், சகோதரியின் தகாத உறவை பத்து வயது முதலே பார்த்து வந்துள்ளார். அப்போது இருந்தே ராஜ் அக்காவின் மீது கோபமாக இருந்ததாக தெரிகிறது. சிறுவன் என்பதால் எதுவும் சொல்ல முடியாமலும், எதுவும் செய்யமுடியாமலும், தவித்து வந்துள்ளார்.
தனது அக்கா ஷீலாவை ஊர்மக்கள் அவதூறாக பேசுவதையும், இத்தனை ஆண்டுகள் சகித்துக் கொண்டு வந்தார். ஆனால் தனது சகோதரி ஷீலா செய்வது தவறு, மற்றும் கனகராஜை கண்டிக்க வேண்டும், என்று பல வருடங்களாக மனதில் நினைத்துக் கொண்டு வந்துள்ளார். இதனால் ராஜ் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஷீலாவின் தம்பி ராஜ் மற்றும் அவரது நண்பர் சதாவரம் உதயகுமார் , சகோரியின் கள்ளக்காதலன் கனகராஜ் ஆகியோர் கூட்டாக இணைந்து வீட்டருகே அதிகாலை 2 மணி வரை மது அருந்தியுள்ளனர்.
மதுபோதையில் கனகராஜ் மற்றும் ராஜீக்கும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ், பீர் பாட்டிலை உடைத்து கனகராஜை கழுத்து உள்ளிட்ட பல பகுதியில் சரமாரியாகக் குத்தியும் அருகிலிருந்த அம்மிக்கல்லால் கனகராஜ் முகத்தை சிதைத்து, நண்பருடன் சேர்ந்து கொடூர கொலை செய்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே சகோதரியின் கள்ளக்காதலன் இறந்ததையடுத்து, ராஜ் மற்றும் அவரது நண்பர் சதாவரம் உதயகுமார் ஆகியோர் தப்பி தலைமறைவாகினர். சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய
ஆய்வாளர் ராஜகோபால் கனகராஜ் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துார். இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.