கள்ளக்காதலை கண்டு பிடித்து கணவன் செய்த கொடூரம்!
கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர், செல்போன் சார்ஜர் வயரால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகா முத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் , எலபுர்கா தாலுகா யதோணி கிராமத்தை சேர்ந்த25 வயதான மஞ்சுளாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார் . இந்நிலையில் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக ஊழியராக பணியாற்றி வரும் மஞ்சுநாத்துக்கும், குஷ்டகியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் மஞ்சுநாத்தும், அந்த பெண்ணும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர். இதுபற்றி அவரின் மனைவி மஞ்சுளாவுக்கு தெரியவந்து உள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி மஞ்சுநாத்திடம், மஞ்சுளா கூறி வந்து உள்ளார். இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. அதனால் அவரின் கள்ள காதலி போட்டு கொடுத்த திட்டப்படி அந்த மஞ்சுநாத் அவரின் மனைவியை கொன்று விட்டு காதலியுடன் வாழ முடிவெடுத்தார் .அதனால் நேற்று அவரை, வெளியே போகலாம் என்று கூட்டி சென்றார் .பிறகு வீட்டுக்கு வந்து மனைவி தூங்கியபோது ,அவரின் கழுத்தை செல்போன் சார்ஜ்ர் ஒயரால் நெரித்து மஞ்சுநாத் கொலை செய்து விட்டார் .
பின்னர் போலீசுக்கு இந்த கொலை பற்றி தெரிய வந்ததும் விசாரணை மேற்கொண்டு அந்த மஞ்சுளாவை கொன்ற மஞ்சுநாத்தை கைது செய்தனர் .