கள்ளக்காதலனுடன் உல்லாசம்..கணவனை கதற கதற கொன்ற மனைவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் வாசு. இவரின் மனைவி சொப்பனபிரியா.
திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் சொப்பன பிரியாவுக்கும் மணிகண்டன் என்பவருக்கு நல்ல உறவு ஏற்பட்டு இருக்கிறது. இதை புரிந்து கொண்டு சொப்பன பிரியாவை கடுமையாக எச்சரித்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி அன்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய வாசு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்திருக்கிறார். சொப்பன பிரியாவிடம் சண்டை போடுவதற்காகவே அப்படி வந்திருக்கிறார்.
இனிமேல் மணிகண்டனுடன் உனக்கு தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தால் சும்மா விட மாட்டேன் என்று ஆவேசமாக சத்தம் போட்டு பேசியிருக்கிறார். பின்னர் போதை மயக்கத்தில் அவர் தூங்கிவிட்டார். இதை எடுத்து இரவு பதினொரு மணிக்கு மணிகண்டனுக்கு செல்போனில் பேசி, ஒன்று என்னை கொன்று விடு. இல்லை என் கணவனைக் கொன்று விடு என்று ஆத்திரமாய் கூறியிருக்கிறார் சொப்பன பிரியா. உன்னை கொன்று விட்டால் எனக்கு என்ன பிரயோஜனம் இருக்கிறது. உன் கணவனை கொன்றால் எனக்கு பிரயோஜனம் இருக்கிறது என்று சொன்ன மணிகண்டன் உடனே பிரியா வீட்டுக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த வாசுவின் கழுத்தில் செல்போன் சார்ஜர் வயரை போட்டு இறுக்கி அவரை கொலை செய்து விட்டு தப்பித்து விட்டார்.
தன் கணவர் மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்லி நாடகமாடியதில் உறவினர்கள் நம்பியிருக்கின்றனர். ஆனாலும் அக்கம்பக்கத்தினரும் சந்தேகத்தின்பேரில் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் வாசுவின் கழுத்தை பிளாஸ்டிக் வைத்து அழுத்தியதில் கழுத்து எழும்புகள் முறிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிய வந்தது.
இதை அடுத்து சொப்பனா பிரியா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார்.
கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக மூச்சை நிறுத்திய செயல் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது