உல்லாச வாழ்க்கைக்காக உறவினர் வீட்டில் கொள்ளையடித்த கள்ளக்காதல் ஜோடி

Arrest Robbery Fake Love
By Thahir Sep 29, 2021 08:30 AM GMT
Report

உறவினர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு ஊட்டியில் உல்லாசமாக இருந்த கள்ள காதல் ஜோடியை போலீசார் 50 சவரன் நகையுடன் கைது செய்தனர்.

உல்லாச வாழ்க்கைக்காக உறவினர் வீட்டில் கொள்ளையடித்த கள்ளக்காதல் ஜோடி | Fake Love Robbery Arrest

கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பேபிசுதா நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் பேபிசுதா தனது இரு மகள்களுடன் சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி பெத்தேல்புரம் பகுதியில் வசிக்கும் தனது தம்பி மனைவி ஷர்மிளா மோள் பேபிசுதாவை விருந்துக்கு அழைக்கவே பேபிசுதா தனது வீட்டை பூட்டி விட்டு ஷர்மிளாமோள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டு விருந்து முடித்துவிட்டு ஜனவரி 28-ம் தேதி பேபிசுதா சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய போது அவரது வீட்டின் பின்பக்க கதவுகள் மற்றும் அறை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் அறையில் உள்ள பீரோவை சென்று பார்த்த போது அதில் இருந்த 50-சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதையடுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் கடந்த 7-மாதங்களாக விசாரணை மேற்கொண்டதில் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து கொள்ளை நடந்த அன்று அப்பகுதியில் இயங்கிய செல்போன்களை போலீசார் ஆராயத் தொடங்கினர்.

அப்போது பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் நம்பர் அடிக்கடி இளம் பெண்ணிடம் பேசி வந்ததை அறிந்த போலீசார் அந்த இளைஞர் மீது சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து அவர் இளம் பெண்ணுடன் வீட்டில் இருந்த போது சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த இஞ்சிரியரான பபின் என்பது தெரியவந்தது.

ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்த அவர் கொரோனா நோய் தொற்றால் வேலையிழந்து கடந்த ஒன்றரை வருடத்திற்கு சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளா மோள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியுள்ளது.இதையடுத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து உல்லாச வாழ்க்கைக்கு பணம் தேவைபட்ட நிலையில் பபினுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார் கள்ளக்காதலி ஷர்மிளா மோள்.

தனது கணவரின் சகோதரி மிகவும் செல்வ செழிப்பாக இருக்கிறார்.அவர் வீட்டில் நகை எங்கு எங்கு இருக்கிறது என்பது தனக்கு தெரியும் அந்த நகைகளை கொள்ளையடித்தால் நாம் உல்லாசமாகவும்,சொகுசாகவும் இருக்கலாம் என்று க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பபின் தனது கள்ளக்காதலின் திட்டத்திற்கு கட்டுப்பட்டு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷர்மிளா மோள் போட்ட திட்டம் நிறைவேற பேபி சுதாவிற்கு விருந்து வைப்பதாக கூறி அவரை தனது வீட்டிற்கு வர வழைத்துள்ளார்.

தனது கள்ளக்காதலனை தொடர்பு கொண்டு அவர்கள் வந்து விட்டனர் நீ அவர்கள் வீட்டிற்கு சென்று நகைகளை எடுத்து வா என்று செல்போனில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நகைகள் எங்கு இருக்கிறது என்பதையும் தனது கள்ளக்காதலனுக்கு கூறியுள்ளார். தனது கள்ளகாதலி அறிவுறுத்தலின் படி 50-சவரன் தங்க நகைகளை அங்கிருந்து கொள்ளையடித்து தப்பி வந்த பபின் தனது கள்ளக்காதலி ஷர்மிளா மோள் உடன் நகைகளை விற்ற பணத்தில் ஊட்டியில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

தனது கணவரிடம் வேலை விசயமாக சென்னை செல்வதாக கூறிவிட்டு ஊட்டியில் உல்லாசத்தை அனுபவித்து வந்த கள்ளக்காதல் ஜோடி நகைகளை விற்ற பணத்தில் வீடு ஒன்றை கட்டி உள்ளது அந்த வீட்டில் உல்லாசமாக இருந்த போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 50 சவரன் நகைகளை மீட்ட காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளம் பெண் தனது கள்ளக்காதலனுடன் கம்பி எண்ணி வருகிறார்.