மனைவியுடன் தொடர்பு… மகன் தற்கொலை - கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவன்

Tamil Nadu Police Death Pudukkottai
By Thahir Apr 18, 2023 05:42 AM GMT
Report

மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த வாலிபரை கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலால் படுகொலை 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராசாத்தி இவருக்கும் திருச்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் திருணம் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராசாத்திக்கும், முருகேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முருகேசன் தன் மனைவி ராசாத்தியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

ராசாத்தி அன்னவாசலில் உள்ள தனது அம்மா வீட்டில் தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார். அப்போது ராசாத்திக்கு முத்துக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

மனைவியுடன் தொடர்பு… மகன் தற்கொலை - கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவன் | Fake Love Murder To Husband

இந்த விவகாரம் மூத்த மகனுக்கு தெரியவரவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் கணவர் முருகேசனுக்கு தெரியவரவே அவர் முத்துகுமாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், முருகேசன் தனது உறவினர்கள் கையில் இருந்த அரிவாளை வாங்கி கள்ளக்காதலன் முத்துக்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

போலீசார் வழக்குப்பதிவு 

இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் கொண்டு செல்லும் போது அவர் வழியில் உயிரிழந்துள்ளார்.

மனைவியுடன் தொடர்பு… மகன் தற்கொலை - கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவன் | Fake Love Murder To Husband

இச்சம்பவம் பற்றி அறிந்த போலீசார் கள்ளக்காதலன் முத்துக்குமாரை வெட்டிய முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர்.