உல்லாச உலகம் உனக்கே சொந்தம்..கள்ளக்காதலனுடன் நகை,பணம்,சொகுசு காருடன் ஓடிப்போன தொழில் அதிபர் மனைவி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்துள்ள பகுதி கொடுங்குளம்.. இங்கு வசித்து வருபவர் மோகன்ராஜ்.. 41 வயதாகிறது.
இவர் 4 சக்கர வாகனம் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சோனியா காந்தி (35).
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார்.
அப்போது 13 லட்சம் பணம், 45 பவுன் நகை, சொகுசு கார் மற்றும் கைக்குழந்தையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தனிப்படை நடத்திய விசாரணையில் குமரியில் இருந்து மாயமான சோனியா காந்தி குழந்தையுடன் கேரளாவில் உள்ள ஒரு லாட்ஜில் இளைஞர் ஒருவருடன் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இளம்பெண் மற்றும் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.. ஆனால், சோனியா காந்தி அங்கிருந்து தப்பிவிட்டார்.
ஆனால், ஒரு மாதம் ஆகியும் சோனியா காந்தி கிடைக்கவில்லை.. இதனால் மோகன்ராஜ் மதுரை ஐகோர்ட் கிளையில் மனைவியையும், குழந்தையையும் கண்டுபிடித்து தருமாறு ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்தார்.
இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதி, 30 நாளில் சோனியா காந்தி, அவரது மகள் ஆகியோரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மார்த்தாண்டம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஒரு இளைஞருடன் டெல்லியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்றனர்.
அங்கிருக்கும் உள்ளூர் போலீசார் உதவியுடன் 3 பேரையும் கண்டுபிடித்தனர், குமரிமாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களை கோர்ட் உத்தரவுப்படி குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோர்ட்டுக்கு மோகன்ராஜ், மற்றும் அவரது மகன் இருவரும் வந்திருந்தனர். 2 தரப்பிலும் போலீஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது சோனியாகாந்தி, கணவருடன் வாழமுடியாது, காதலனுடன்தான் வாழ்வேன்" என்றார். இதை கேட்டதும் மோகன்ராஜ், எனக்காக வர வேண்டாம், மகனுக்கு ஆபரேஷன் செய்யணும்.
அவனை கூடவே இருந்து பாத்துக்கணும்.. பிள்ளைகளுக்காக வந்துவிடு என்று கெஞ்சினார். ஆனால், சோனியா அவர் பேசியதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
காதலனுடன்தான் செல்வேன் என்று போலீசாரிடம் உறுதியாக தெரிவித்து விட்டார். மறுபடியும் மோகன்ராஜ், சோனியா காந்தியிடம் கெஞ்சினார்.
இறுதியில் ஒருவழியாக கணவருடன் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இருதரப்பிலும் எழுதி வாங்கி கொண்டு, சோனியா, குழந்தையை, மோகன்ராஜுடன் அனுப்பி வைத்தனர்.
அதுவரை அங்கு நடப்பதையெல்லாம் பார்த்த கொண்டிருந்த கள்ளக்காதலனையும் வார்னிங் தந்து அனுப்பி வைத்தனர்.