கள்ளக்காதலிக்காக மோதிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் - கொலையில் முடிந்த விபரீதம்
கள்ளக்காதலிக்காக ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சுமன், இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பூமிகா என்பவர் திருமணம் ஆகி கணவரை இழந்த நிலையில் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
பூமிகாவும் ஆட்டோ ஓட்டுநர் சுமனும் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்து வந்த நிலையில், மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் சக்திவேலுடன் பூமிகாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் சுமனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இரு ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆட்டோ ஓட்டுநர் கொலை
இதையடுத்து, நேற்று இரவு சமாதானம் பேசுவதாக கூறி சக்திவேலை, சுமன் தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது பூமிகா விவகாரத்தில் தலையிட கூடாது "என்று சுமன் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சுமன் தனது நண்பர்கள் உதவியுடன் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் டிஎஸ்பி சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் ஆய்வாளர் (பொறுப்பு) நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர்கள் சாலை மறியல்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுமர் நண்பர்களை கைது செய்த போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவான கள்ள காதலி பூமிகாவையும் போலீஸார்தேடி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர் சக்திவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரி சக்திவேல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பண்ருட்டி - சேலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்