கள்ளக்காதல்: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்
கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை தாய் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கோடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகேஷ்- ஞானமலர் தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் பிரகாஷ் என்ற மகனும், ஆதிரா என்ற 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
மகேஷ் கூலி வேலை செய்து வந்ததால் வேலை காரணமாக வெளியே சென்று விடுவார். இந்நிலையில் ஞான மலருக்கும் அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான தங்கராஜ் என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுயிருக்கிறது.
இவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பதை அக்கம் பக்கத்தினர் ஞானமலரின் கணவர் மாதேஷ்க்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
இதனை அறிந்த மாதேஷ் தனது மனைவி ஞானமலரை கடுமையாக கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஞானமலர் தனது கள்ள காதலன் தங்கராஜுக்கு போன் செய்து, கணவன் கண்டித்த விஷயத்தை சொல்லியும், மேலும் குழந்தைகள் இருப்பதால் வீட்டில் இனிமேல் உல்லாசமாக இருக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து அந்தக் கல்நெஞ்சம் படைத்த தாய் தனது 2 குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி குழந்தைகளுக்கு எலி பேஸ்ட் வாங்கி கொடுத்துள்ளார். அதனை உண்ட குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 9 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனை அடுத்து மாதேஷ் ராயக்கோட்டை போலீசில் மனைவியை குறித்தும் தங்கராஜ் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் ஞான மலரை விசாரித்துள்ளனர்.
விசாரணையின் முடிவில் பெற்ற தாயே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஞானமலரையும், தங்கராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர்.