Fake Fielding சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி - தீயாய் பரவும் தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
நேற்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்து எதிரான ஆட்டத்தில் Fake Fielding செய்ததாக சர்ச்சையில் விராட் கோலி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
வங்காள தேசத்தை வீழ்த்திய இந்தியா மாபெரும் வெற்றி
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் அரங்கத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) நேருக்கு நேர் மோதியது.
இந்தியா வெற்றியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளதால், இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் வெற்றிக்காக காத்துக்கொண்டிருந்தனர். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. இப்போட்டியின் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
Fake Fielding சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி
நேற்று T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிரான விராட் கோலி Fake Fielding செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் வீசிய 7வது ஓவரின்போது பந்தை பிடிக்காமல், ஸ்டம்பை நோக்கி எறிவது போல விராட் கோலி Fake Fielding செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இப்படி செய்வது ஐசிசியின் 41.5வது விதிமுறைக்கு எதிரானது என்று சொல்லப்படுகிறது.
மேலும், வங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது நடுவர் தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலி பீல்டிங்கிற்காக விராட் கோலிக்கு எதிராக நடுவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மற்றும் ஈரமான அவுட்ஃபீல்ட் காரணமாக மறுதொடக்கத்தை தாமதப்படுத்த ஷாகிப் அல் ஹசனின் கோரிக்கையை புறக்கணித்ததால் பிசிபி அதிருப்தி அடைந்துள்ளது.
ரசிகர்கள் கவலை
இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் தற்போதுதான், விராட் கோலி நல்ல பார்முலாவில் சென்று கொண்டிருக்கிறார். அதற்குள் இப்படி ஒரு சர்ச்சை எழுந்துள்ளதே என்று சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Fake Fielding???#T20WorldCup #INDvBAN #ViratKohli? pic.twitter.com/fv3xcRHzPi
— RVCJ Media (@RVCJ_FB) November 3, 2022
Reports state Bangladesh Cricket Board is to raise issues around the umpiring during their match against India. BCB is unhappy that umpires took no action against Virat Kohli for fake fielding & ignored Shakib Al Hasan's request to delay the restart due to a wet outfield #BANvIND pic.twitter.com/xpzl7MEmpA
— Saj Sadiq (@SajSadiqCricket) November 3, 2022