நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி கணக்கு - போலீசில் புகார்
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பியவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.
பிரபலங்களை குறிவைத்து அவதூறு பரப்பும் வகையில் போலி ட்விட்டர் கணக்குகளை உருவாக்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் போலி சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் தொடங்கி இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரபரப்பப்பட்டு வந்தது.
உடனடியாக இதுகுறித்து சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அவதூறு பரப்பிய மர்ம நபர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.