முட்டையை உடைத்தால் உள்ளே ஒன்றுமே இல்லை.. போலி முட்டையால் ஒரு கிராமமே ஏமாந்த கதை!
ஆந்திர மாநிலத்தில் முட்டைக்கு பதிலாக முட்டை போன்ற பிளாஸ்டிக் பொருளை கம்மி விலைக்கு வாங்கி ஏமாந்த கிராம மக்களின் சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மினி வேனில் ஒரு வியாபாரி முட்டைகளை விற்று வந்துள்ளார். அப்போது முப்பது முட்டை 130 ரூபாய் என்று அவர் கூறியதும், விலை குறைவே என கிராமமக்களும் அடித்து பிடித்து ஆவலுடன் முட்டைகளை வாங்கி சென்றுள்ளனர்.
முட்டைகளை எல்லாம் விற்பனை செய்ததும் வியாபாரி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். முட்டைகளை வீட்டிற்கு எடுத்து சென்ற மக்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வேகவைத்து உடைத்து பார்த்துள்ளனர்.
முட்டைக்குள் ஒன்றுமே இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி மூட்டைகளை எல்லாம் உடைத்து பார்த்துள்ளனர்.
அப்போது தான் அது முட்டை இல்லை பிளாஸ்டிக்கால் ஆன ஒரு பொருள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் ஒன்றிணைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஒருவர் மட்டும் அல்ல ஒரு கிராமத்திடமே போலி முட்டையை விற்று எஸ்கேப் ஆகியுள்ள
நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.