திண்டுக்கல் கள்ளநோட்டு பயன்படுத்திய இருவரை கைது செய்த போலீஸ்

Tamil Nadu Dindigul Fake Currency
By mohanelango Apr 21, 2021 05:43 AM GMT
Report

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையோர சிறு வியாபாரிகளிடம் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற கும்பலைச் சேர்ந்த இருவர் கைது.

மேலும் சிலர் ஊடுருவியிருக்கலாம் என்ற தகவலையடுத்து காவல்த்துறையினர் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் - மதுரை தேசிய நான்குவழிச்சாலை கொடைரோடு சுங்கச்சாவடி அருகே காமலாபுரம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் உள்ள பழக்கடையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் பழங்கள் வாங்கியபோது 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளனர்.

அப்போது அது கள்ளநோட்டு என தெரிந்து கடைக்காரர் அதை வாங்க மறுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த ரோந்து காவலர்கள் அன்பழகன் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இருவரும் பழனியைச் சேர்ந்த நாகரத்தினம் (43) மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த தனலட்சுமி (42)எனவும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்து 30x500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் மற்றும் மூன்று 100 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்துடன் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து விசாரணை செய்த அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சொர்ணலெட்சுமி தீவிர விசாரனை செய்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கொடைரோடு ரயில் நிலையம் பூக்கள் மற்றும் பழங்கள் அதிகம் ஏற்றுமதி செய்யும் பகுதியாக உள்ளது கொடைரோடு.

இந்த பகுதியில் இதுபோன்ற கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுருவியிருப்பதாக வந்த தகவலையடுத்து மாவட்ட நிர்வாகம் சிறப்பு தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்