இறுதிப்போட்டியில் தோல்வி: தூக்கில் தொங்கிய பிரபல வீராங்கனை
மல்யுத்த போட்டி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் 17 வயதான இளம் மல்யுத்த வீராங்கனையான ரித்திகா போகாட் உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஹரியானா மாநில போலீசார் கூறியுள்ளனர். அவர் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது - “மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகாட் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் பிரபல மல்யுத்த வீரங்கனைகளான கீதா மற்றும் பாபிதா போகட்டின் தாய் வழி சொந்தத்தில், சகோதரி உறவு முறை. தற்கொலைக்கான காரணம் போட்டியில் பெற்ற தோல்வியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என ஹரியானா மாநிலத்தின் சாக்ரி தாதிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் சிங் பிஷோனி தெரிவித்திருக்கிறார்.

‘தங்கல்’ படத்தில் வரும் மல்யுத்த சகோதரிகளின் கதை நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கபட்ட திரைப்படம். அதில் வரும் கீதா, பபிதா சகோதரிகளின் உறவினர்தான் உயிரிழந்த ரித்திகா.
இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. போகாட் சகோதரிகள் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் மல்யுத்த விளையாட்டில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.