நடிகர் சிம்புவுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்? - வெளியான சுவாரஸ்ய தகவல்

fahadfasil coronakumarmovie simbufahadfasil fahadcoronakumar
By Swetha Subash Mar 07, 2022 01:21 PM GMT
Report

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் கொரோனா குமார் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் கடந்த 2013-ம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அஸ்வின் நடிப்பில் வெளியான 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சிம்புவுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்? - வெளியான சுவாரஸ்ய தகவல் | Fahad Boards On Corona Kumar Crew

இதனை தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க, 'கொரோனா குமார்' என்ற தலைப்பில் உருவாகிறது.

இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் தான் இயக்க போகிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்? - வெளியான சுவாரஸ்ய தகவல் | Fahad Boards On Corona Kumar Crew

இந்த செய்தி படம் மீதான எதிர்பார்ப்பை இரண்டு மடகு அதிகரித்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மேலும், ஃபஹத் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.