வீடியோ பதிவின் மூலம் பிரியா விடை கொடுத்த சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்!
ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தனது பயணம் முடிவுக்கு வந்ததையடுத்து தென்னாப்பிரிக்காவின் மூத்த பேட்ஸ்மேன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் சிஎஸ்கே அணி தொடர்புடைய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2-வது நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தின் முதல் நாளில் ஃபாஃப் டு பிளெசிஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
முன்னதாக, கடந்த 2011-ம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இணைந்த டு பிளெஸ்ஸிஸ் 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஐபிஎல்-இல் இருந்து சென்னை அணி தடை செய்யப்பட்ட இரண்டு சீசன்களைத் தவிர,
அதன் பின்னர் நடைப்பெற்ற ஒவ்வொரு சீசனிலும் விளையாடி இருக்கிறார்.
இந்நிலையில் அவர் இந்த சீசனில் பெங்களூரு அணியில் இணைந்துள்ளார். இதனையடுத்து 10 ஆண்டுகள் சென்னையுடன் பயணித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் டு பிளெஸிஸ்.
"10 ஆண்டுகளில் சென்னை அணிக்காக விளையாடியதில் நெகிழ்ச்சியான அனுபவங்களை பெற்றுள்ளேன். அந்த நினைவுகள் என்றும் நீங்காமல் இருக்கும்.
இப்போது புதிய அணி, புதிய களம், துடிப்போடும், ஆர்வத்துடனும் எதிர்கொள்ள காத்திருக்கிறேன்.
?#SuperKingForever @faf1307 pic.twitter.com/rt3MUcOD4o
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) February 13, 2022
சிஎஸ்கே ரசிகர்கள், சக வீரர்கள், நிர்வாகத்தினருக்கு என் நன்றி! " என்று டு பிளெஸிஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துளார்.
இந்த விடியோ பதிவை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.