"நினைவாற்றலை இழந்துவிட்டேன்" -தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் உருக்கமான பதிவு

Faf du Plessis suffers memory loss
By Petchi Avudaiappan Jun 14, 2021 10:41 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக சில நினைவாற்றலை இழந்துவிட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி தொடரின் 19வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் நேற்று மோதின.

இதில் முதல் இன்னிங்சின் 7-வது ஓவரின் போது, பெஷாவர் அணி பேட்ஸ்மேன் பவுண்டரி லைனுக்கு பந்தை விரட்டினார். அப்போது பீல்டிங்கில் இருந்த கிளாடியேட்டர்ஸ் அணி வீரர்கள் டூப்ளசிஸ் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோர் பந்தை தடுக்க முயன்றபோது ஹஸ்னைன் காலில், டூப்ளசிஸ் தலை வேகமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த டூப்ளசிஸ், வெளியில் சில நேரம் உட்கார வைக்கப்பட்டார். அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன்பின் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் அறிவுரைப்படி டூப்ளசிஸ் ஓய்வெடுத்து வருகிறார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. நான் மீண்டும் குணமடைந்து வருகிறேன். சில நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் களத்தில் இறங்குவேன் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.