'நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்' - எம்எஸ் தோனியை புகழ்ந்து தள்ளிய டூ பிளெஸ்ஸிஸ்!

MS Dhoni Cricket Faf du Plessis Sports IPL 2024
By Jiyath Jan 09, 2024 05:57 AM GMT
Report

தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார். 

எம்எஸ் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "சென்னை அணியில் இளம் வீரராக இருந்தது மகத்தானதாக அமைந்தது.

புகழாரம்

அங்கே எம்எஸ் தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களை போன்ற பெரிய வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.

தோனியை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும்போது உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அனைவரும் அழைப்பது போல தோனி கூலான கேப்டன். அவர் அழுத்தமான நேரங்களிலும் அமைதியாக இருப்பார்.

பொதுவாகவே நீங்கள் அழுத்தமான நேரங்களில் ரிலாக்ஸாக இருந்து பந்துவீச்சு கூட்டணியில் மாற்றங்களை செய்து பயன்படுத்துவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்" என்று தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.