RCB அணிக்கு நேரம் சரியில்லை..! - கேப்டன் டு பிளெசிஸ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்

Lucknow Super Giants Royal Challengers Bangalore Faf du Plessis IPL 2023
By Thahir Apr 11, 2023 07:32 AM GMT
Report

பெங்களூரு அணி கேப்டன் ரூ.12 லட்சம் அபராதம் விதிகப்பட்டுள்ளது.

லக்னோ அணி த்ரில் வெற்றி 

16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இந்தாண்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 15-வது லீக் ஆட்டத்தின நேற்றை போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.

faf-du-plessis-fined-rs-12-lakh

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 1 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டு பிளெசிஸ்க்கு அபராதம் 

இந்த நிலையில் பெங்களூரு அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

faf-du-plessis-fined-rs-12-lakh

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் டு பிளெசிஸ்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.