சென்னை அணியிலிருந்து டூபிளசி நீக்கம்? முன்னாள் வீரர் ஓபன் டாக்
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா டூப்லஸ்ஸிஸ் எந்த அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்பது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
உலகெங்கும் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் தொடராக இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் உள்ளது,
இதில் பங்கேற்று விளையாட வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் வீரர்கள் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் வீரர்களும் ஆசைப்படுவார்கள்.
அப்படி மிகவும் பிரசித்தி பெற்ற ஐபிஎல் தொடர் 2008 முதல் 2021 வரை மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பத்து அணிகளை கொண்டு 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது,இதற்கான எதிர்பார்ப்புகள் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளது.
மேலும் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது,
இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் உட்பட உலகெங்கும் இருக்கும் 1214 வீரர்கள் தங்களது பெயர்களை ஏலத்திற்காக பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 2022 ஐபிஎல் ஏலத்தில் எந்த வீரரை எந்த அணி தேர்வு செய்யும் என்று பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் கிரிக்கெட் பற்றி ஆக்டிவாக பேசிவரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா,தனது யூடியூப் சேனலில் தென்னாப்பிரிக்க அணியின் டூப்லஸ்ஸிஸ் எந்த அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், சென்னை அணி டூப்லஸ்ஸிஸை மீண்டும் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்,
சென்னை அணி டூப்லஸ்ஸிஸ்ர்க்கு வயதாகிவிட்டது என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு அவரை விட்டுவிடும் என்று தெரியவில்லை,
அவர் சென்னை அணிக்காக மிக சிறந்த முறையில் விளையாடியுள்ளார், நிச்சயம் மீண்டும் அவர் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் சிறப்பாகவே செயல்படுவார்.
மேலும் சென்னை அணிக்கு கிடைத்த பெரிய ஜாக்பாட் என்னவென்றால், டுப்லஸ்ஸிஸை குறைந்த தொகையில் அணியில் இணைத்து விடலாம்,
ஏனென்றால் டூப்லஸ்ஸிஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார், மேலும் அவருக்கு வயதாகிவிட்டது.
இதனால் இவரை மற்ற அணிகள் தனது அணியில் இணைப்பதற்கு கவனம் செலுத்துமா என்பது தெரியவில்லை,
இதனால் சென்னை அணி டூப்லஸ்ஸிஸை குறைந்த தொகைக்கு தனது அணியில் இணைத்துக் கொள்ளலாம் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தார்.