கொல்கத்தா பந்து வீச்சாளர்களை மிரட்டி எடுத்த டூ ப்ளசிஸ் - அரண்டுபோன வீரர்கள்
துபாயில் நடைபெறும் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா, சென்னையை முதலில் பேட் செய்ய சொல்லி பணித்தது. டூ பிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இருவரும் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இந்த சீசனில் இருவரும் 756 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இணைந்து சேர்த்த அதிகபட்ச ரன்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளனர்.
கோலி-டிவில்லியர்ஸ் மற்றும் வார்னர்-பேர்ஸ்டோ முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ருதுராஜ் 27 பந்துகளில் 32 ரன்களை சேர்த்து அவுட்டானார்.
தொடர்ந்து வந்த உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்தார். மறுபக்கம் டூ பிளசிஸ், லாங்-ஆஃப் திசையில் சிக்சர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
மூன்றாவது ஓவரில் டூ பிளசிஸ், கிரீஸில் தனது பேலன்ஸை இழந்திருந்தார். அதை பயன்படுத்தி கொல்கத்தா விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் செய்ய தவறினார்.
அதை டூ பிளசிஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
இறுதி வரை விளையாடிய டூ பிளசிஸ் 59 பந்துகளில் 86 ரன்களை எடுத்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவுட்டானார். மொயின் அலி 20 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். அதில் 3 சிக்சர்கள் அடங்கும்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
