மும்பை போட்டியில்.. டாஸ் போடும்போது ஏமாத்திட்டாங்க? டு பிளெஸ்ஸிஸ் வேதனை!
டாஸ் விவகாரம் தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்ஸில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் - பெங்களூரு
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக துவங்குவதற்கு முன் டாஸ் போடும் இடத்திற்கு வந்த டு பிளெசிஸ், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும் போது தான் எவ்வாறு ஏமாந்தேன் என்பது குறித்து பேட் கம்மின்ஸிடம் கூறுவது போல சில செய்கைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
வைரலாகும் வீடியோ
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் "கடந்த போட்டியின் போது என்ன நடந்தது தெரியுமா? டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள். அப்போது அந்த காயின் கீழே விழுந்தது.
பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள்" என்பது போல டு பிளெசிஸ் செய்கையை செய்து காட்டி விளக்கம் கொடுத்தார். இதனை கேட்ட கம்மின்ஸ் சிரித்தபடியே கவனித்துக் கொண்டிருந்தார்.
Top video is RCB vs MI - last week, bottom video is 15th April. In bottom video Du Plessis is explaining to Cummins how referee (Srinath) cheated to make MI toss winner.@Nicks103 is this true? pic.twitter.com/7QsIMix8Bj
— Bhot Hard ?? (@Bhot_Haard) April 15, 2024

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் IBC Tamil
