ஒருவிமானி பிரதமர் ஆன கதை : டிஜிட்டல் இந்தியாவின் முன்னோடி ராஜிவ்காந்தி

Indian National Congress Rajiv Gandhi
By Irumporai Nov 26, 2022 10:11 AM GMT
Report

அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்.

தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான். எஃப். கென்னடி. அதே போலத்தான் இந்தியாவின் டிஜிட்டல் யுகத்திற்கு வித்திட்ட ராஜிவ் காந்தியின் மரணமும் இருந்தது. 

அரசியலில் விருப்பம் இல்லை

தான் ஒரு விமானியாக அறிவியலில் ஆர்வமுள்ள வல்லுநராக ஆக வேண்டும் என்பதே ராஜீவ் காந்தியின் விருப்பம் , மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய தாய் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதிலும் அவர் அரசியலில் இருந்து விலகியே இருந்தார் என்பது அனைவராலும் அறியப்பட்டது தான். அதே போல அவர் விமானியாக பணியாற்றியதும் பலராலும் அறியப்பட்ட ஒன்று.

ஒருவிமானி பிரதமர் ஆன கதை : டிஜிட்டல் இந்தியாவின் முன்னோடி ராஜிவ்காந்தி | Facts About Rajiv Gandhi In Tamil

தாயினால் அரசியல் பயணம் 

தனது தாயின் விருப்பத்திற்கேற்ப தனது நாற்பதாவது வயதில் பாரத நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் ஏராளம். இந்த நாட்டின் வறுமையை விஞ்ஞானத்தாலும், தொழில்நுட்பத்தாலும்தான் விரட்ட முடியும் என்று ராஜீவ் காந்தி நம்பினார்.

ஒருவிமானி பிரதமர் ஆன கதை : டிஜிட்டல் இந்தியாவின் முன்னோடி ராஜிவ்காந்தி | Facts About Rajiv Gandhi In Tamil

தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். இந்திய மக்களை 21-ம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்ல தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டினார். நாட்டை எதிர்நோக்கி இருந்த பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டார்.

அவரது அணுகுமுறையில் வித்தியாசம் இருந்தது. மாறுதல் இருந்தது. பஞ்சாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், அசாம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உடன்பாடு கண்டார்.

திட்டங்களில் சாதனைகள்

இந்த உடன்பாட்டைக் காண்பதில் அரசியல் கண்ணோட்டமின்றி, நாட்டு நலனையே பெரிதாக மதித்தார். கூர்க்கா பிரச்சினையையும், மிசோ மக்கள் பிரச்சினையையும் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

எதிலும் ஒரு முடிவு காண வேண்டுமென்பதில் கண்ணும், கருத்துமாக இருந்து செயல்பட்டார். ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதைத் தடுத்து, அதைக் கீழ்மட்டத்திலும் பகிர்ந்து கொடுக்க பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகாசட்டத்தை கொண்டுவந்து, மக்களுக்கே அதிகாரம்என்ற லட்சியத்தை அடைய முயன்றார்.

ஒருவிமானி பிரதமர் ஆன கதை : டிஜிட்டல் இந்தியாவின் முன்னோடி ராஜிவ்காந்தி | Facts About Rajiv Gandhi In Tamil

அண்டை நாடுகளோடு நல்லுறவு காண்பதில் தீவிரம் காட்டினார். மாலத்தீவில் ஆட்சியை எதிர்த்து கலகப்போர் நடந்தபோது, அந்த அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க ராணுவத்தை அனுப்பி, நொடிப்பொழுதில் போரை அடக்கி அந்நாட்டைக் காப்பாற்றிய பெருமை நமது இந்தியாவுக்கு உண்டு.

நமது ராஜீவ் காந்திக்கு உண்டு. சகோதர சகவாழ்வு நமது லட்சியமாக இருந்தது என்பதற்கு இது ஓர் உதாரணம். அந்நிய நாடுகளானாலும், அண்டை நாடுகளானாலும் சுமுகமான உறவுகாண ‘சார்க்’ என்ற அமைப்பை உருவாக்க பெரும் பங்காற்றினார்.

கூர்க்கா பிரச்சினையையும், மிசோ மக்கள் பிரச்சினையையும் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். எதிலும் ஒரு முடிவு காண வேண்டுமென்பதில் கண்ணும், கருத்துமாக இருந்து செயல்பட்டார்.

ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதைத் தடுத்து, அதைக் கீழ்மட்டத்திலும் பகிர்ந்து கொடுக்க ‘பஞ்சாயத்து ராஜ்’, ‘நகர்பாலிகா’ சட்டத்தை கொண்டுவந்து, ‘மக்களுக்கே அதிகாரம்’ என்ற லட்சியத்தை அடைய முயன்றார்.

டிஜிட்டல் இந்தியாவின் முன்னோடி

இந்தியாவில் இரயில்வே டிக்கெட்டுகள் கணினிமயமாக்கப்பட்டது இவரது காலத்தில்தான், இளைஞர்களின் பங்கு அரசியலில் அதிகம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து வாக்களிக்கும் வயதினை 21 வயதிலிருந்து 18 வயதாக குறைத்தார், இவரது காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகமாக இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டன.

ஒருவிமானி பிரதமர் ஆன கதை : டிஜிட்டல் இந்தியாவின் முன்னோடி ராஜிவ்காந்தி | Facts About Rajiv Gandhi In Tamil

இந்திராகாந்தியின் மறைவுக்கு பிறகு நடந்த பொதுத்தேர்தலில் இந்தியா முழுக்க 250 இடங்களுக்கு சென்று மக்களோடு மக்களாக பிரச்சாரம் செய்தார், அப்படி தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்யும் போதுதான் குண்டு வெடிப்பில் பலியானார்.

ஒருவிமானி பிரதமர் ஆன கதை : டிஜிட்டல் இந்தியாவின் முன்னோடி ராஜிவ்காந்தி | Facts About Rajiv Gandhi In Tamil

அந்த சோகத்தை எப்போதும் தமிழகம் மறக்காது , அந்த இழப்பிற்காக தமிழகம் இப்போது வரை கண்ணீர் விட்டு கொண்டுதான் இருக்கிறது, அவர் மறைந்தாலும் இனி வரும் காலங்களில் இந்தியாவில் டிஜிட்டல் இருக்கும் வரை ராஜிவ் காந்தியும் இருப்பார்.