இந்திய பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படும் பி.வி.நரசிம்ம ராவ்..!

India
By Thahir Jan 30, 2023 09:33 AM GMT
Report

இந்திய பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தான் பி.வி.நரசிம்ம ராவ் ஏன்? எதற்காக அப்படி அழைக்கப்படுகிறார் என்பதை இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

பிறப்பு முதல் அரசியல் வரை 

1921 ஆம் ஆண்டு ஜுன் 28ம் தேதி தெலங்காணா மாநிலம் லக்னேபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். பின்னர் உசுமானியா பல்கழைக்கழகத்தில் இளங்கலை படித்த அவர், பின்னர் மும்பை பல்கலைகழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டம் பெற்றார்.

வழக்கறிஞராக பணியாற்றி வந்த அவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த தலைவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

இந்திய பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படும் பி.வி.நரசிம்ம ராவ்..! | Facts About P V Narasimha Rao In Tamil

பின்னர் தேர்தலில் களம் இறங்கிய பி.வி.நரசிம்ம ராவ் 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார். பின்னர் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக பதவி வகித்து வந்தார். 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொருளாதாரத்தின் தந்தை 

பின்னர் அவ்வாண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பி.வி.நரசிம்ம ராவ். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றார். இந்தியாவில் அரசியலமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டார்.

இந்திய பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படும் பி.வி.நரசிம்ம ராவ்..! | Facts About P V Narasimha Rao In Tamil

இந்நிலையில் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் இதனால் அவர் இந்தியாவின் தந்தை என பி.வி.நரசிம்ம ராவ் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.