தேநீர் கடை முதல் ..நாடாளுமன்றம் வரை : ஏழைத்தாயின் மகன் பிரதமர் ஆன கதை

BJP Narendra Modi
By Irumporai Nov 25, 2022 07:41 AM GMT
Report

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேசத்தை குஜராத்தாக மாற்ற மோடியால் முடியாது எனக் கூறினார்.

அதற்கு அடுத்த நாள் தனது தேர்தல் பிரசாரத்தில் பேசிய நரேந்திர மோதி, முலாயமின் பாணியிலேயே பதிலளித்தார். மோதியால் உத்தரப்பிரதேசத்தை இரண்டாவது குஜராத்தாக மாற்ற முடியாது என்று ஒரு தலைவர் சொல்கிறார்.

தேநீர் கடை முதல் ..நாடாளுமன்றம் வரை : ஏழைத்தாயின் மகன் பிரதமர் ஆன கதை | Facts About Narendra Modi In Tamil

இரண்டாவது குஜராத்தை உருவாக்க முக்கியமானது எது என்று தெரியுமா? 56 அங்குல அளவு கொண்ட மார்பு இது அப்போது பெரும் விவாத பொருளானது. ஆனால் அகமதாபாதில் மோடியின் துணிகளை தைக்கும் 'ஜெட் ப்ளூ' என்ற கடையை மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நீலஞ்சன் முகோபாத்யாய் அணுகியபோது மோதியின் மார்பளவை உறுதி செய்யமுடியவில்லை.

தையற் கலைஞரிடம் மோdiயின் உண்மையான மார்பு அளவைப் பற்றி நீலஞ்சன் கேட்டபோது அவர் மெளனமாகவே இருந்தார். ஆனால் மோடியின் மார்பளவு 56 அங்குலம் இல்லை என்று மட்டும் அவர் தெரிவித்தார்.

பிற மோடியின் குர்தாவை தைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டபோது நரேந்திர மோதியின் மார்பளவு 50 அங்குலம் என்ற உண்மை வெளியானது. பல சர்ச்சைகள் இவரை பற்றி இருந்தாலும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.


1950 செப்டெம்பர் 17இல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ள வத்நகரில் தாமோதர் தாஸ் முல்சந் மோதி-ஹீராபேன் இணையருக்கு மகனாக பிறந்தார் நரேந்திர மோடி. மொத்தம் உள்ள 6 மகன்களில் 3வதாக பிறந்தார் மோடி.

இவருக்கு 'யசோதா பென்' என்ற மனைவி உள்ளார்.இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வடோதரா பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது,அதில் தனக்கு யசோதா பென் என்றவருடன் திருமணம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.அப்போது இது தொடர்பான சர்சைகள் பரபரப்பாக பேசப்பட்டது.

 வட்நகர் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே,ரயில் நிலையத்தில் உள்ள தனது தந்தையின் டீ கடையில் வேலை செய்வார்.தனது 8வது வயதிலேயே,ஆர் எஸ் எஸ் இல் உறுப்பினராக சேர்ந்தார் மோடி. பின்னர்,குஜராத் பல்கலை கழகத்தில் அரசியல் அறிவியலில் (Political Science) முதுகலை பட்டம் பெற்றார். என கூறப்படுகிறது. 

கில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பின் குழு தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.நெருக்கடி நிலையின் போது, பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.அப்போது,ஆர் எஸ் எஸ்ஸின் தீவிர பற்றாளராக மாறினார்.பிஜேபியில் உறுப்பினாராக சேர்ந்தார் மோடி.உறுப்பினாராக சேர்ந்த 1 வருட காலத்தில்,குஜராத் மாநில பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.

திட்டமிடுதல்: 

1988 முதல் 95 வரையிலான காலகட்டத்தில் மிகச்சிறந்த திட்டமிடுபவராக செயல்பட்டார் மோடி. குஜராத் பா.ஜ.க.,வை ஆளுங் கட்சியாக்க தேவையான அடிப்படைப்பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தவர் என்ற பெயரையும் பெற்றார். இந்தசமயத்தில் இரண்டு முக்கியமான தேசிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணியும் அவருக்கு வந்துசேர்ந்தது.

தேநீர் கடை முதல் ..நாடாளுமன்றம் வரை : ஏழைத்தாயின் மகன் பிரதமர் ஆன கதை | Facts About Narendra Modi In Tamil

அதில் ஒன்று சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானியின் ரதயாத்திரை. அதேபோல கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரை.இவற்றை எல்லாம் சரியாக செயல்படுத்தி தான் யார் என்று நிரூபித்தார்.

தேசிய செயலாளர்: 

 1998ஆம் ஆண்டில் 'இமாச்சல பிரதேசம்','குஜராத்' தேர்தல் பொறுப்பாளராக அத்வானியால் நியமிக்கப்பட்டார்.பின்னர் இமாச்சலபிரதேசம்,பஞ்சாப்,ஹரியானா,சண்டிகர்,ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.1998இல் அடல் பிகாரி வாஜிபாய் பிரதமராக பதவியேற்றபொழுது,மோடிக்கு 'தேசிய செயலாளர்' என்ற பதவியும் அளிக்கப்பட்டது.

குஜராத் முதல்வர்: 

அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல்'ராஜினாமா செய்ததை அடுத்து,2001,அக்டோபர் 7இல் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.

நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.பிப்ரவரி 27,2002ஆம் ஆண்டு நடந்த 'கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தேநீர் கடை முதல் ..நாடாளுமன்றம் வரை : ஏழைத்தாயின் மகன் பிரதமர் ஆன கதை | Facts About Narendra Modi In Tamil

அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைத்தார்.பின்னர் 2007,2012 ஆகிய தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று 4வது முறையாகவும் குஜராத் முதல்வர் ஆக பதவியேற்று,திறம்பட செயலாற்றினார்.நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார் நரேந்திர மோடி. 

இணையம் மூலம் மக்களுடன் தொடர்பு:

மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதைத் தவிர இணைய தளத்திலும் வலுவான மக்கள் தொடர்பை கொண்டுள்ளார். இந்தியாவின் தொழில்நுட்ப விரும்பியாக அறியப்படும் தலைவர் இவர். மக்களை இணையதளம் மூலம் சென்றடைந்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரவே தொழில்நுட்பத்தை பயன் படுத்துகிறார். பேஸ்புக், டுவிட்டர், கூகுள் பிளஸ், இன்ஸ்டாகிராம், சவுண்டு கிளவுட், லிங்கிடு-இன், வைபோ மற்றும் பிற சமூக வலைத்தளங்களை வெகுவாக பயன்படுத்துகிறார்.

2014 தேர்தல்: 

  தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் போட்டியிட்டனர் பிஜேபி மற்றும் கூட்டணி வேட்பாளர்கள்.இவர்களை ஆதரித்து,கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு,430 பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.2014 மே 26இல் இந்திய நாட்டின் பிரதமராக 'நரேந்திர மோடி' பதவியேற்றார்.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் இவர் ஆவார்.

திட்டங்கள்:

பிரதமர் மக்கள் நிதித் திட்டம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிதிநிலை முறையில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. பிரதமருடைய இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம், தொழில் செய்வதை எளிதாக்கியதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழைப்பே உயர்வு தரும் என்ற திட்டத்தின் கீழ் உழைப்பாளர்களின் சீர்திருத்தம், உழைப்பாளர்களின் மரியாதை இரண்டும் பல்வேறு நடுத்தர மற்றும் சிறு தொழில் உழைப்பாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. திறமைமிகு இளைஞர்களுக்கும் இது உற்சாகம் அளித்துள்ளது. முதன் முறையாக இந்திய மக்களின் நலனுக்காக இந்திய அரசு, மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களை துவக்கி உள்ளது. முதியோர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதிலும் ஏழைகளுக்குக் காப்பீடு வழங்குவதிலும் இத்திட்டம் முக்கியத்துவம் அளித்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளை அக்டோபர் 2, 2014ம் ஆண்டு அன்று பிரதமர் தூய்மையான இந்தியா இயக்கத்தை நாடு முழுவதும் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அளவும் தாக்கமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது.

நரேந்திர மோடியின் சர்வதேசக் கொள்கை நடவடிக்கைகள் உலக அரங்கில், மிகப் பெரிய குடியாட்சியின் பங்கையும் இந்தியாவின் திறனையும் நிரூபித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இவர் வழங்கிய உரை உலகெங்கும் பாராட்டப்பட்டது.

17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கும், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கும், 31 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிஜிக்கும் 34 ஆண்டுகளுக்கு பிறகு செஷல்ஸ்க்கும் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் இவர்.

பதவியேற்றப்பின் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள், பிரிக்ஸ், சார்க் நாடுகள் மற்றும் ஜி20 சந்திப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டார். உலகளவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளில் தலையீடும், இந்தியாவின் கருத்துக்களும் பெருமளவில் பாராட்டப்பட்டன.

இந்தியா அமெரிக்க இடையேயான உறவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமா இந்தியா குடியரசு தினம்  2015 கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்,ஆடம்பரமான உடைகள் அணிதல்,தொடர்ந்து வெளிநாட்டு பயணம்,ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்பு,பலனில்லா பொருளாதார கொள்கைகள்,கருப்பு பணம் ஒழிப்பு,பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை என பல திட்டங்கள் மக்களை ஏமாற்றின.

தேநீர் கடை முதல் ..நாடாளுமன்றம் வரை : ஏழைத்தாயின் மகன் பிரதமர் ஆன கதை | Facts About Narendra Modi In Tamil

அது மட்டுமல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை,உலகம் முழுவதும் சுற்றும் பிரதமர் இந்தியாவிற்கு எப்போது வருவார் என்ற சந்தேகம்,ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுதல்,விலைவாசி உயர்வு,ஹிந்தி திணிப்பு,தற்போது தமிழக அரசை பின்னிருந்து இயக்குதல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி அரசின் மீதுள்ள விமர்சனங்களாக உள்ளது.

அரசியலைத் தவிர எழுதுவதிலும் நரேந்திர மோடி ஆர்வம் கொண்டுள்ளார்.சக்தி பாவ் (2015),சமூக நல்லிணக்கம்(2015),ஜோதி பூனா(2015),சமாஜிக் சம்ரஸ்தா (சமூக நல்லிணக்கம் என்ற நூலின் குஜராத்தி மொழிப்பெயர்ப்பு) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற புத்தகம் மோடியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமாகும்., இப்புத்தகத்தில், மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பின், சந்தித்த சவால்கள், செயல்படுத்திய புதுமையான திட்டங்கள் குறித்து இடம்பெற்று உள்ளன. 2014ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு விஷயங்களை முன்வைத்து வெற்றிபெற்றார் மோடி.

காங்கிரஸின் ஆட்சியில் மக்கள் முன்னேற முடியாமல் தவிப்பதாக கூறிய மோடி, நாட்டில் இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக வாக்களித்தார். ஓர் ஆண்டிற்குள் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பெரிய கனவை இளைஞர்களிடம் விதைத்தார். வேறுவிதமாக கூறவேண்டுமானால் மாதந்தோறும் 8 லட்சத்து 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதாக வாக்களித்தார். இந்த லட்சியத்தை தற்போது வரை அடையாதது, மோடி அரசின் மிகப்பெரிய தோல்வியாகும் .

அதே சமயம் இன்றைய நிலையில், பாஜகவுக்கு வலுவான மாற்று என்று எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இரண்டாம், மூன்றாம், நான்காம் அணி என்று யாரையும் கை காண்பிக்க முடியாது. வரும் ஐந்தாண்டுகளில் எதிர்க்கட்சிகள் வரிசையிலிருந்து ஒரு புது, இளம் தலைவர் உருவாகி வந்தால் மட்டுமே பாஜகவின் தேர்தல் இயந்திரத்தை எதிர்கொள்ள முடியும். அது நிச்சயமாக ராகுல் காந்தியாகவோ பிரியங்கா காந்தியாகவோ இருக்க முடியாது எனக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள் அதுதான் இந்த ஏழைத்தாயின் மகனான மோடியின் வெற்றி.