மாபெரும் களப்போராளியாக திகழ்ந்த மக்கள் நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயண் - சிறப்பு பகிர்வு!

India
By Sumathi Jan 30, 2023 12:41 PM GMT
Report

சுதந்திர இந்தியாவின் முகங்களில் முதன்மையானவர். மாபெரும் களப்போராளியாகத் திகழ்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜெ.பி என்றும் அழைக்கப்பட்டார்.

களப்போராளி

பீகார் மாகாணத்தில் பிறந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், அமெரிக்காவில் தங்கி உயர்கல்வி பயின்றார். ஏழு ஆண்டுக்கால அமெரிக்க வாசத்தில், காரல் மார்க்ஸ் அறிமுகம் பெற்ற ஜெ.பி, இந்தியச் சமூகத்தையே அடியோடு மாற்றியமைக்க வேண்டுமென முடிவுசெய்தார். காந்தி ஆசிரமத்திலேயே துறவு வாழ்க்கை வாழ விரும்பினார். அதனை ஏற்றுக்கொண்டு குடும்ப வாழ்விலிருந்து ஒதுங்கினார் ஜெயப்பிரகாஷ்.

மாபெரும் களப்போராளியாக திகழ்ந்த மக்கள் நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயண் - சிறப்பு பகிர்வு! | Facts About Jayaprakash Narayan In Tamil

அவரது உள்ளம் முழுவதும் பொதுவுடைமைக் கொள்கைகள் தீவிரமாகி இருந்தது. 1929-ம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு, காந்தியின் அழைப்பை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜெ.பி, காந்தியின் படைத்தளபதிகளில் முதன்மையானவராக விளங்கினார். ’ஒத்துழையாமை’ இயக்கத்தில் கலந்துகொண்டதன்மூலம் பொதுவாழ்வில் நுழைந்தார், ஜெ.பி. 'வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாபெரும் களப்போராளியாக திகழ்ந்த மக்கள் நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயண் - சிறப்பு பகிர்வு! | Facts About Jayaprakash Narayan In Tamil

 சிறைவாசம் 

சிறையிலிருந்து தப்பித்த ஜெ.பி தலைக்கு, பிரிட்டிஷ் அரசு 10,000 ரூபாய் விலை வைத்தது. பின்னர் 1943-ம் ஆண்டு மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஜெ.பி, 16 மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைகளை எதிர்கொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, பிரதமர் நேரு பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் அமைச்சரவையில் சேர மறுத்துவிட்டார். தேர்தல் அரசியலையே முற்றாகப் புறக்கணித்து மக்கள் பணியில் ஈடுபட்டுவந்தார்.

மாபெரும் களப்போராளியாக திகழ்ந்த மக்கள் நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயண் - சிறப்பு பகிர்வு! | Facts About Jayaprakash Narayan In Tamil

வினோபா பாவே-யின் அழைப்பை ஏற்று, பூமிதான இயக்கத்திற்காக நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். நெருக்கடி நிலை காலத்தில், சண்டிகர் சிறையில் அடைக்கப்பட்டார். இருமுறை நாட்டின் உயரிய பொறுப்புகளை அலங்கரிக்க வாய்ப்பு கிடைத்தபோதும் அதை ஏற்காது மறுத்தவர் ஜெ.பி. காங்கிரஸில் தனக்குப் பிறகு ஜெ.பி-தான் என நேருவே பலமுறை குறிப்பிட்டபோதும், நேருவின் மறைவுக்குப் பிறகு அவருக்கு வந்த பிரதமர் நாற்காலியையும் அலங்கரிக்க மறுத்தார், ஜெ.பி.

தீவிர அரசியல் 

எமர்ஜென்சிக்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் தோற்று ஜனதா கட்சி பெரும்பான்மையாக வெற்றிபெற்றபோதும் பிரதமர் நாற்காலி ஜெ.பி-யை நோக்கி வந்தது. அப்போதும் அதை ஏற்காமல் மறுத்துவிட்டார். சில காலம் பொது வாழ்விலிருந்து விலகியிருந்த ஜெ.பி, 1970 -களின் தொடக்கத்தில் உருவான வேலைவாய்ப்பின்மை, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முதன்மையான முகமாகத் திகழ்ந்தார்.

மாபெரும் களப்போராளியாக திகழ்ந்த மக்கள் நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயண் - சிறப்பு பகிர்வு! | Facts About Jayaprakash Narayan In Tamil

பிகாரில் தீவிர அரசியலுக்கு ஜெயப்பிரகாஷர் மீண்டும் திரும்பினார். அம்மாநிலத்தில் நிலவிய ஊழலுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும் தார்க்குண்டே உடன் இணைந்து முழுப் புரட்சி இயக்கத்தைத் துவக்கினார். இந்த இயக்கம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து இந்திய அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றுள்ள அரசியல் தலைவர்களுள் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நரேந்திர மோடி உள்பட பலர் இக்காலத்ததில் வார்க்கப்பட்டவர்களாவர்.

மாபெரும் களப்போராளியாக திகழ்ந்த மக்கள் நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயண் - சிறப்பு பகிர்வு! | Facts About Jayaprakash Narayan In Tamil

புரட்சி

1974 ஆம் ஆண்டு,அவர் தலைமையேற்ற மாணவர் இயக்கம் பரவலான மக்கள் இயக்கமாக மாறியது.இந்த இயக்கத்தின்போதே அவர் முழுமையான புரட்சிக்கு குரல் கொடுத்தார்.1974-இல் சனநாயகம் வேண்டும் குடிமக்கள்(Citizens for Democracy) என்ற அரசுசாரா அமைப்பையும் 1976ஆம் ஆண்டு குடியுரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு (People's Union for Civil Liberties)என்ற அரசுசாரா அமைப்பையும் . தோற்றுவித்தார்.

மாபெரும் களப்போராளியாக திகழ்ந்த மக்கள் நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயண் - சிறப்பு பகிர்வு! | Facts About Jayaprakash Narayan In Tamil

பிரதமர் இந்திரா காந்தி, நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியபோது, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1977-ம் ஆண்டு நெருக்கடி நிலைக்குப் பிறகான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா கட்சியை உருவாக்குவதில் முக்கியமான பங்காற்றினார். எந்த காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக காந்தி, நேரு காலம்தொட்டு உழைத்தாரோ, அதே காங்கிரஸ் கட்சியின் முதல் தோல்விக்கு வித்திட்டார்.

மறைவு

ஜனதா கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் ஜெயப்பிரகாஷுக்கு மனவேதனை அளித்தன. அவரது உடல்நலமும் குன்றிவந்தது. ஆட்சியை மாற்றிய போதும் பதவியை நாடாதவர்; தனது தலைமையால் இந்திய ஜனநாயகத்தை மீட்ட ஜெயபிரகாஷ் உடல்நலக்குறைவால் 1979, அக்டோபர் 8-ல் பாட்னாவில் காலமானார். அவருக்கு 1998- ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பாட்னாவில் உள்ள விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.  

மாபெரும் களப்போராளியாக திகழ்ந்த மக்கள் நாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயண் - சிறப்பு பகிர்வு! | Facts About Jayaprakash Narayan In Tamil