முதல் இந்திய குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத்தின் வாழ்க்கை பயணம்!

India
By Vinothini May 25, 2023 04:55 PM GMT
Report

 விடுதலை இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் கடந்து வந்த பாதை குறித்து காணலாம்.

ஆரம்ப வாழ்கை

இந்திய விடுதலை போராட்ட வீரரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், 1884-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3-ம் தேதி பிறந்தார். இவர் இந்தியாவின் பீகார் மாநிலதில் சிவான் மாவட்டத்திலுள்ள செராடெ என்ற இடத்தில் மகாவீர சாகி மற்றும் கமலேசுவரி தேவி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

facts-about-dr-rajendra-prasad-in-tamil

இவரது தந்தை பெர்சியா மொழி மற்றும் சமஸ்கிருத மொழியில் சிறப்புப்பெற்றவராகவும், இவருடைய தாய் சமயப் பற்றுடையவராகவும் இருந்தனர்.

இவர் தனது ஐந்தாவது வயதில் ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் பெர்சியா, இந்தி மொழிகள் மற்றும் கணிதம் கற்கத் தொடங்கினார். பிறகு, சாப்ரா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.

இவர் 1907 ஆம் ஆண்டு, “கொல்கத்தா பிரிசிடன்சி கல்லூரியில்” பொருளியல் துறையில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர், எம்.ஏ முதுகலை பட்டபடிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சிப்பெற்றார்.

பின்னர், சட்டக் கல்விப் பயின்று, முதல் மாணவனாகத் தேர்ச்சிப்பெற்று தங்கப் பதக்கத்தையும் வென்றார் பிறகு சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

சுதந்திர போராட்டம்

இவர் சட்ட படிப்பை முடித்த பிறகு, வழக்கறிஞர் பதவி ஏற்று பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றுள்ளார். அவரது வாதத்திறமை அவரை ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் சொற்பொழிவாளராக மாற்றியது.

facts-about-dr-rajendra-prasad-in-tamil

பிறகு அவர் மக்களுக்காக தனது குரலினை கொடுக்க ஆரம்பித்தார். பிறகு சிறிது காலம் கழித்து காந்திஅடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது வழி பின்பற்றி தான் செய்து கொண்டிருந்த வழக்கறிஞர் பதவியினை துறந்து காந்தி அடிகளின் ” ஒத்துழையாமை இயக்கம்” என்ற இயக்கத்தில் தன்னை இணைத்து கொணடார்.

அதன்பிறகு பல போராட்டங்களில் கலந்து கொண்ட இவர் மக்களுக்காக தனது குரலினை உயர்த்தினார். பிறகு 1942-ம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் கைதானவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

facts-about-dr-rajendra-prasad-in-tamil

பின்னர் இவர் மூன்று ஆண்டுகள் கழித்து 1945-ம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கபட்டார். முதல் குடியரசு தலைவர் 1947ல் இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் அரசியல் அமைப்பு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசியல் அமைப்பு குழுவில் தனது சிறப்பான பங்கினை அளித்தார்.

மேலும் 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் “முதல் குடியரசு தலைவராக” பதவியேற்றார். 1952 மற்றும் 1957ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்தார்.

இவர் ஒருவர் மட்டுமே இன்றுவரை இரண்டு முறை குடியரசு தலைவராக இருந்துள்ளார். 1962ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இறப்பு

1962 ஆம் ஆண்டு தன்னுடைய குடியரசு தலைவர் பதவியை நிறைவு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் , 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி காலமானார்.

facts-about-dr-rajendra-prasad-in-tamil

இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதை மே 13, 1962 ஆம் ஆண்டில் வழங்கி கெளரவித்தது.

உண்மைகள்

1906-ல் பாட்னா கல்லூரி மண்டபத்தில் பிஹாரி மாணவர் மாநாட்டை அமைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றினார். 1937-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முனைவர் பட்டமும், அதற்கு தங்கப் பதக்கம் வென்றார்.

facts-about-dr-rajendra-prasad-in-tamil

இவர் 1911-ல் கல்கத்தாவில் நடைபெற்ற வருடாந்திர அமர்வின் போது அதிகாரப்பூர்வமாக இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.

1931-ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகவும், 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்ததற்காகவும் ஆங்கிலேயர்களால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார்.

facts-about-dr-rajendra-prasad-in-tamil

இவர் அரசியலமைப்புச் சபையின் (1948-1950) தலைவரானார், அது ஒரு குடியரசு நாடாக இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்கியது. அரசியலமைப்பு சபையின் கடைசி அமர்வின் போது, இடைக்கால அரசாங்கத்தின் இந்திய ஜனாதிபதியாக ஒருமனதாக நியமிக்கப்பட்டார்.

இவர் மிக உயர்ந்த தேசிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். அவர் பிப்ரவரி 28, 1963-ல் இறந்தார், பாட்னாவில் உள்ள ராஜேந்திர ஸ்மிருதி சங்க்ரஹாலயா அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.