நாடுகாத்த நல்லவர் : எளிய மனிதன் பிரதமர் ஆன கதை

By Irumporai Nov 27, 2022 11:01 AM GMT
Report

சமுதாயத்தின் மிக எளிய நிலையிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர்கள் மிகச் சிலரே. அவர்களில் முதன்மையானவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.

லால் பகதூர் சாஸ்திரி :

சாஸ்திரி 2 அக்டோபர் 1904 அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசத்தில் வாரணாசியில் ஷரதா பிரசாத் மற்றும் ராம் துலாரி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை அலகாபாத்தில் உள்ள வருவாய் அலுவலகத்தில் எழுத்தராக பணிப்புரிந்து வந்தார்.

சாஸ்திரிக்கு ஒரு வயது இருந்தபோது அவரது தந்தை இறந்தார். சாஸ்திரிக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர் கிழக்கு மத்திய ரயில்வே இண்டர் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை பயின்றார். பின்னர் 1926 இல் ‘காஹி வித்யாபீத்தில்’ பட்டம் பெற்றார்.

சாஸ்திரியின் காலத்தில் இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடந்துக்கொண்டிருந்தது. சாஸ்திரி மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1920 இல் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொண்டார். மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் இவர் சேர்ந்தார்.

அதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். சிறைக்கு சென்றிருந்தாலும் அவர் 1937 இல் உத்திர பிரதேசத்தின் நாடாளுமன்ற வாரியத்தின் செயலாளராக பணிப்புரிந்தார்.

நாடுகாத்த நல்லவர் : எளிய மனிதன் பிரதமர் ஆன கதை | Facts About Dr Rajendra Prasad In Tamil

பின்பு உப்பு சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக மேலும் ஒரு வருடம் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

பிரதமராக சாஸ்திரி

அதன் பிறகு அவர் மகாத்மா காந்தியின் ‘இந்தியாவை விட்டு வெளியேறு” இயக்கத்தில் சேர்ந்ததற்காகவும் ஜவர்ஹலால் நேருவின் வீட்டில் இருந்து சுதந்திர போராளிகளுக்கு அறிவுரை வழங்கியதற்காகவும் மீண்டும் 1942 இல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த முறை அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் பிறகு 1947 ஆம் ஆண்டு சாஸ்திரி உத்திர பிரதேச காவல்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். 1964 இல் அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவர்ஹலால் நேரு இறந்தார்.

இதனால் அடுத்த தலைவர் யார்? என்கிற பேச்சு வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.காமராஜ் பிரதமர் பதவிக்கு சாஸ்திரியின் பெயரை முன் வைத்தார். அதே ஆண்டு சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

நாடுகாத்த நல்லவர் : எளிய மனிதன் பிரதமர் ஆன கதை | Facts About Dr Rajendra Prasad In Tamil

சாஸ்திரி பிரதமராக பதவியேற்ற பிறகு 1965 இல் இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தது. அபோது சாஸ்திரி நாட்டை வழிநடத்தினார்.

இந்த போரின் போதுதான் “ஜெய் ஜவான் ஜெய் கிஷன்” என்னும் வாசகத்தை அவர் முழங்கினார். விரைவிலேயே அது தேசிய முழக்கமாக எதிரொலித்தது.  

மரணத்தில் சர்ச்சை

1965 இல் பாகிஸ்தானுடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானின் அப்போதைய ஜனாதிபதியான முஹம்மது ஆயூப்கானுடன் தாஷ்கண்டில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டு அவர்கள் இருவரும் ‘தாஷ்கண்ட்’ பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

நாடுகாத்த நல்லவர் : எளிய மனிதன் பிரதமர் ஆன கதை | Facts About Dr Rajendra Prasad In Tamil

1966இல் தாஷ்கண்டில் இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சாஸ்திரிக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன.

பாகிஸ்தானுக்கு ஹாஜி பீர் மற்றும் டீத்வால் ஆகிய பகுதிகளை திரும்பி அளிக்க வேண்டும் என்பது குறித்து இந்தியாவில் பலவிதமான சர்ச்சைகளும் எழுந்தன.