பட்ஜெட் குறித்து அறிந்ததும், அறியாததுமான சுவாரஸ்ய 10 தகவல்கள்!

Smt Nirmala Sitharaman India Budget 2023
By Sumathi Feb 01, 2023 11:35 AM GMT
Report

பட்ஜெட் தாக்கல் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

10 சுவாரஸ்ய உண்மைகள்

பட்ஜெட் குறித்து அறிந்ததும், அறியாததுமான சுவாரஸ்ய 10 தகவல்கள்! | Facts About Budget India

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 பட்ஜெட்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் 1955 வரை ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் சமர்பிக்க முடிவு செய்யப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை நாட்டின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். அது இடைக்கால பட்ஜெட்டாக ஏழரை மாதங்களுக்கு அதாவது 1948, மார்ச் 31ம் தேதிவரைக்குமே தாக்கல் செய்யப்பட்டது.

1958-1959 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்கலால் நேரு வாசித்தார்.

இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட் 2018-ம் ஆண்டுப் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்திய பட்ஜெட் வரலாற்றில் 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்த போது தான் ஜிஎஸ்டி என்ற வார்த்தை முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

கடந்த 1970-71ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார். நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு வரை 92 ஆண்டுகளாக தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில் பட்ஜெட் 2017 ஆண்டு பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 - 22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காகிதம் இன்றி டிஜிட்டல் முறையில் முதல்முறையாக தாக்கல் செய்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை கிட்டத்தட்ட 162 நிமிடங்களுக்கு நீடித்தது. இதுவே இந்திய வரலாற்றில் நிதியமைச்சர் ஒருவர் தாக்கல் செய்த நீண்ட நேர பட்ஜெட் உரை எனக் கூறப்படுகிறது.

கடந்த 1998-ம் ஆண்டுக்கு முன்பு வரை பட்ஜெட் என்பது ஆங்கிலேயர் கால வழக்கப்படி மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், வாஜ்பாய் ஆட்சி காலத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் மாற்றப்பட்டு, காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.