கனவு காண சொல்லிவிட்டு கனவாய் மறைந்த அப்துல் கலாமின் வரலாறு

Tamil nadu Indian Space Research Organisation A. P. J. Abdul Kalam
By Thahir Feb 22, 2023 03:41 PM GMT
Report

இளைஞர்களின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஏவுகணை நாயகனின் வரலாற்றை இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

பிறப்பு - ஆரம்ப படிப்பு 

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ஜைனுலாப்புதீன் - ஆஷியம்மா என்பவர்களுக்கு மகனாக பிறந்தார் அப்துல் கலாம். இவர் இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் படிப்பை ஆரம்பித்தார்.

கனவு காண சொல்லிவிட்டு கனவாய் மறைந்த அப்துல் கலாமின் வரலாறு | Facts About Apj Abdul Kalam In Tamil

ஏழ்மை நிலையில் குடும்பம் இருந்து வந்ததை கருத்தில் கொண்டு படிக்கும் போதே குடும்பத்திற்காக வேலைக்கு சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் செய்திதாள்கள் விநியோகம் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார்.

வின்வெளியில் ஆர்வம் கொண்ட அப்துல் கலாம் 

பின்னர் தான் உயர்கல்வியை தொடர முடியுமா? என்று கருதிய போது அப்துல் கலாமுக்கு அவருடை தொடக்க கல்வி ஆசிரியர் சிவசுப்பிரமணியன் உதவியோடு உயர் கல்வியை முடித்தார். உயர்கல்வியை முடித்த பின் திருச்சியில் உள்ள சென் ஜோசப் கல்லுாரியில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார்.

படிப்பை முடித்த பின்னர் அவர் அந்த பட்டத்தை பெறவில்லை. பின்னர் 48 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பட்டத்தை கேட்டு பெற்றுக் கொண்டார். இயற்பியல் படிப்பில் ஆர்வம் இல்லாததை உணர்ந்த அப்துல் கலாம்.

கனவு காண சொல்லிவிட்டு கனவாய் மறைந்த அப்துல் கலாமின் வரலாறு | Facts About Apj Abdul Kalam In Tamil

சென்னை எம் ஐ டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தார். விமானியாக வேண்டும் என்ற எண்ணம் காரணமாக தேர்வை எழுதினார். அந்த தேர்வில் 9 வது இடத்தை பிடித்தார். ஆனால் அவருக்கு விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பத்மபூஷன் - பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை பெற்றார் 

1960 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானுர்த்தி அபிவிருத்தி அமைப்பின் பெயரில் டிஆர்டிஓ விஞ்ஞானி ஆக தன்னுடைய ஆராய்ச்சியை தொடங்கினார். மாத சம்பளமாக ரூ.250 பெற்று இந்திய ராணுவத்திற்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து கொடுத்தார்.

இந்தியாவின் ஆராய்ச்சி கூடமான இஸ்ரோவில் தன்னுடைய ஆராய்ச்சி பணிகளை தொடர்ந்தார். துணைக்கோள் ஏவுகணை பிரிவில் எஸ்எல்வி செயற்கைக்கோளில் ஏவுவதற்கான முக்கிய பங்கு ஆற்றினார். 1980 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட எஸ்எல்வி மூன்று செயற்கை கோள்களை ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

கனவு காண சொல்லிவிட்டு கனவாய் மறைந்த அப்துல் கலாமின் வரலாறு | Facts About Apj Abdul Kalam In Tamil

இதையடுத்து அவருக்கு மத்திய அரசு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1963 முதல் 1983 வரை இஸ்ரோவில் பணியாற்றினார்.

பல்வேறு சாதனைகளை புரிந்ததால் அவருக்கு 1997 ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் பதவி 

1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய அப்துல் கலாம் 5 ஏவுகணை திட்டத்தில் பங்காற்றியுள்ளார்.

இதையடுத்து அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுதல் மற்றும் அவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் ஆர்வமாக இருந்ததால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றினார்.

பின்னர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜுலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

கனவு காண சொல்லிவிட்டு கனவாய் மறைந்த அப்துல் கலாமின் வரலாறு | Facts About Apj Abdul Kalam In Tamil

மக்களை விட்டு கனவாய் கலைந்தார் 

விஞ்ஞானி மட்டுமின்றி, மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது, என ஆர்வம் கொண்டிருந்த அப்துல் கலாம். நுால்களை எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார். அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கடைசியாக கடந்த 2015 ஜுலை 27ல் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மயங்கி விழுந்து காலமானார்.

கனவு காண சொல்லிவிட்டு கனவாய் மறைந்த அப்துல் கலாமின் வரலாறு | Facts About Apj Abdul Kalam In Tamil

அப்துல் கலாம் இளைஞர்களையும், மாணவர்களையும் கனவு காணுங்கள்.. அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள் என கூறி வந்த நிலையில் மக்கள் மத்தியில் இந்த மண்ணை விட்டு கனவாய் கலைந்தார்.