Fact Check: அயோத்தியில் படையெடுத்த ஜடாயு பறவைகள்? தீயாய் பரவும் வீடியோ!

Viral Video Uttar Pradesh
By Sumathi Jan 08, 2024 06:12 AM GMT
Report

அயோத்தியில் ஜடாயு பறவைகள் குவிந்ததாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அயோத்தி

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ராமாயணத்தில் வரும் ஜடாயு என்ற பறவைகள்

jadayu-birds-in-ayodhya

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்திக்கு வருவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ராட்சத தோற்றத்தில் 7 முதல் 8 பறவைகள் நிற்பதைபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அயோத்தி ராமர் கோவில்; அதானி முதல் விராட் கோலி வரை.. விஐபிக்கள் மட்டுமே இவ்வளவு பேர்!

அயோத்தி ராமர் கோவில்; அதானி முதல் விராட் கோலி வரை.. விஐபிக்கள் மட்டுமே இவ்வளவு பேர்!

ஜடாயு பறவைகள்

ஆனால், வீடியோ குறித்து ஆராய்ந்ததில் கடந்த 2021 ஆம் ஆண்டே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வீடியோ இது. இந்தோனேசியாவில் எடுக்கப்பட்ட வீடியோ எனக் கூறி பலர் பகிர்ந்துள்ளது தெரியவந்தது. மேலும், இது ராமாயண காலத்தில் வாழ்ந்து அழிந்ததாக சொல்லப்படும் ஜடாயு பறவை இல்லை.

இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள இமய மலைத் தொடர்களில் வாழ்ந்து வரும் தங்கக் கழுகுகள். பெரும்பாலும் இந்த பறவை இனம் இமயமலைப் பகுதியை விட்டு வெளியில் செல்வதில்லை. எனவே ஜடாயு பறவைகள் அயோத்தி வந்ததாக பரவும் தகவல் வதந்தி என்பது தெரியவருகிறது.