மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..அரசு பள்ளிகளில் இந்த வசதி வரப்போகுது - முக்கிய அறிவிப்பு!

Tamil nadu Governor of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi
By Swetha Jun 22, 2024 08:30 AM GMT
Report

அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும் என அமைச்சகர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

அரசு பள்ளிகள் 

சட்டப்பேரவை நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..அரசு பள்ளிகளில் இந்த வசதி வரப்போகுது - முக்கிய அறிவிப்பு! | Facilities Will Be Provided To Govt School Anbil

அந்த கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்குநேரி சம்பவம்: சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் - அன்பில் மகேஷ் உறுதி!

நாங்குநேரி சம்பவம்: சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் - அன்பில் மகேஷ் உறுதி!

முக்கிய அறிவிப்பு

மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்யப்படும். ரூ.7500 கோடியில் 16 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..அரசு பள்ளிகளில் இந்த வசதி வரப்போகுது - முக்கிய அறிவிப்பு! | Facilities Will Be Provided To Govt School Anbil

அதில் ரூ. 2,487 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர், ஆய்வகங்கள் உள்பட 3603 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 3,601 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். என அவர் தெரிவித்துள்ளார்.