facebook பெயரை மாற்றுகிறதா ? - இன்னும் 8 நாளில் புதிய அறிவிப்பு!

facebook markzuckerberg changename
By Irumporai Oct 20, 2021 06:37 AM GMT
Report

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் (முகநூல்) பெயர் மாற்றப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் தனக்கென தனி ராஜியம் நடத்தி வரும் பேஸ்புக் பேஸ்புக் நிறுவனம் மெட்டாவர்ஸை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில், அக்டோபர் 28 ம் தேதி வருடாந்திர இணைப்பு மாநாட்டை நடத்த உள்ளது

மேலும், கடந்த சில வருடங்களாக பேஸ்புக் . வர்த்தக செயல்பாடுகளால் அமெரிக்க அரசு அதன் கெடுபிடிகளை அதிகரித்துள்ள நிலையில், பெயர் மாற்றவது குறித்த செய்தி வெளியாகியுள்ளது

வரும்28 ம் தேதி நடக்கவுள்ள இந்த  மாநாட்டில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பங்கேற்று,பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு வேளை . இந்த பெயர் மாற்றம் நிகழ்ந்தால்  பேஸ்புக் நிறுவனத்தின் Instagram, WhatsApp, Oculus ஆகியவற்றையும் சார்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.