6 வயதில் கடத்தப்பட்ட மகள் - 14 ஆண்டுகளுக்குப் பின் தாயுடன் இணைந்த சுவாரஸ்யம்

america child missing reunitewithmom
By Petchi Avudaiappan Sep 17, 2021 06:48 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அமெரிக்கா
Report

 அமெரிக்காவில் 6 வயதில் கடத்தப்பட்ட பெண் ஒருவர் 14 ஆண்டுகளுக்குப் பின் தனது தாயுடன் இணைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் கிளர்மான்ட்டை சேர்ந்த பப்ளோ ஹெர்னாண்டஸ் -ஏஞ்சலினா வின்சி தம்பதியினருக்கு 6 வயதில் ஜாக்குலின் ஹெர்ணான்டஸ் என்ற மகள் இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து விட ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் மட்டும் தாயுடன் வசித்து வந்தார்.

இதனிடையே கடந்த2007 ஆம் அண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் திடீரென மாயமானார். இது பற்றி தாயார் போலீசில் புகார் கொடுத்தார். ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் என்ன ஆனார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போது 19 வயதான விட்ட ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் சமூக வலைதளங்களை பயன்படுத்தினார். பேஸ்புக்கில் பலருடனும் தொடர்பு ஏற்படுத்தி இருந்தார். தான் கடத்தப்பட்ட தகவல்களையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

ஏஞ்சலினா வின்சியும் பேஸ்புக் பயன்படுத்துவார் என்பதால் இருவரும் பரிமாறிக் கொண்ட தகவல்களை வைத்து தாய்-மகள்தான் என்பது உறுதியானது. இதுபற்றி ஏஞ்சலினா வின்சி புளோரிடா போலீசுக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் நடந்த விசாரணையில் ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் அவரது மகள்தான் என்பது அனைத்து ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

அவரை அவரது தந்தையே கடத்தி சென்று இருக்கிறார். மகளை கடத்தியதற்கு பிறகு அவர் அமெரிக்காவில் இருந்து பக்கத்து நாடான மெக்ஸிகோவுக்கு சென்று விட்டார். அங்கேயே ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் வளர்ந்து வந்தார்.

இந்நிலையில் இதனையடுத்து இருவரையும் சந்திக்க வைக்கும் நிகழ்ச்சி இரு நாட்டு எல்லையில் நடைபெற்றது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீரில் மிதந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.