முகநூல் மூலம் பழகிய சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

case arrest girl rape pocso
By Praveen Apr 17, 2021 07:00 PM GMT
Report

முகநூல் மூலம் பழகி தூத்துக்குடி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மதுரை வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா மகன் அப்சல்கான் (32), இவர் முகநூல் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆசைவார்த்தை கூறி அச்சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே மகளை காணவில்லை என்று கூறி சிறுமியின் தாயார் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற அப்சல்கானை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.