மோடி கொள்கையால் பொருளாதார நஷ்டம் : பேஸ்புக் லைவில் விஷம் குடித்த வியாபாரி
பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கையால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய ஷூ வியாபாரி மனைவியுடன் பேஸ்புக் லைவில் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பட் நகரில் ஷூ வியாபாரி ராஜீவ் தோமர் என்பவர் மனைவி பூனம் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு சமீப காலமாக தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்ட ராஜூவ் எனக்கு பேசுவதற்கு சுதந்திரம் இருக்கும் என நினைக்கிறேன். நான் இறந்தால் இதை பார்ப்பவர்கள் அதிகமாக பகிருங்கள். நான் இந்திய நாட்டுக்கு எதிரானவன் அல்ல. நாட்டுக்கு உண்மையாக இருப்பவன் என கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடியாக நீங்கள் சிறு வியாபாரிகள், விவசாயிகளின் நலனை காக்கும் நபராக நீங்கள் இல்லை. உங்கள் கொள்கையை தயவுசெய்து மாற்றி கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டு தனது மனைவி பூனத்துடன் இணைந்து விஷம் குடித்தார்.
இதை பேஸ்புக் லைவில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பூனம் இறந்த நிலையில், ராஜூவ் தோமருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேசத்தில் சிறுவியபாரிகள் தொழிலதிபர்கள் மனஉளைச்சலில் இருப்பதை பார்க்க முடியுகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு ஆகியவை அதிக பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என விமர்சித்துள்ளார்.