டிக்டாக் போன்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபேஸ்புக்!
ஃபேஸ்புக் நிறுவனம் உலகில் அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு எதுவென்றால் அது டிக்டாக் மட்டுமே. தற்போது டிக்டாக் செயலியை போன்று பார்ஸ் என்ற ஆப்-ஐ உருவாக்கி இருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். டிக்டாக் செயலி புகழின் உச்சயில் இருந்த போது மத்திய அரசு அதனை தடை செய்தது இளைஞர்களின் மனதை கஷ்டப்படுத்தியது. இன்னும் பலர் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுவிட்டதே என்ற வருத்தத்தில் உள்ளனர். இந்திய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன செயலியான டிக்டாக்கை மத்திய அரசு தடை செய்தது.
இந்நிலையில் ராப் பாடகர்களை குறிவைத்து பேஸ்புக் நிறுவனம் பார்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ராப் பாடகர்களை குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டாலும், பயனாளர்களுக்கு முறையான ராப் அனுபவம் தேவை இல்லை என்றும் அந்நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த செயலியில் பல்வேறு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக உங்கள் சொற்களை ராப் ஸ்டைலில் மாற்றுவதற்கு பல பீட்ஸ்களும் இதில் அடங்கியுள்ளன. அதில் இருக்கும் ரைமிங் டிக்ஷ்னரி ரைம்களையும் பயனாளர்களுக்கு பரிந்துரைக்கிறது. பயனாளர்கள் பாடி முடித்தவுடன், அதனை மேம்படுத்த பல்வேறு வகையான டூல்கள் இருக்கின்றன. கிளீன், ஆட்டோ ட்யூன் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் வீடியோவை மேலும் மேம்படுத்த முடியும்.
எடுத்த வீடியோவை இன்னும் மெருகேற்றி உங்கள் மொபைலில் சேமித்து கொள்ளலாம். அப்படி சேமித்து வைத்துக் கொள்வதன் மூலம் வேறு தளங்களிலும் உங்கள் வீடியோவை அப்லோடு செய்ய முடியும். பார்ஸ் ஆப்-ஐ ஆப்பிளின் ஐஓஎஸ் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிக்டாக் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அதனைப் போல செயலிகள் உருவாக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றது.
கடந்த ஆண்டு பேஸ்புக் கொல்லாப் என்ற செயலிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதுவும் பேஸ்புக் போன்ற ஒரு செயலி. அதே போல் பேஸ்புக்கின் துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற செயலிலை டிக்டாக் போன்ற உருவாக்கியுள்ளது.