‘’ தேர்தல் பிரச்சார விளம்பரம் , பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த ஃபேஸ்புக் ‘’ : வெளியான அதிர்ச்சி தகவல்

facebook bjp Campaign Ads bjpwinpolls
By Irumporai Mar 17, 2022 08:13 AM GMT
Report

தேர்தல் பிரச்சார விளம்பரங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளை விட பாரதிய ஜனதா கட்சியிடம் ஃபேஸ்புக் நிறுவனம் மிக குறைந்த கட்டணம் வசூல் செய்தது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தி ரிப்போர்ட்டர் கலெக்டிவ் மற்றும் அட் வாட்ஸ் இணைந்து சமூக வலைதளத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் விளம்பரம் தொடர்பாக  எவ்வுளவு செய்தன என்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்து திட்ட அறிக்கை தயாரித்து வெளியிட்டது .

இந்த அறிக்கையில் 2019 பிப்ரவரி முதல் 2020 நவம்பர் வரையிலான காலத்தில் 22 மாதங்களில் நடந்த 10 தேர்தல் வரை உள்ள  புள்ளிவிவரங்கள்  சேகரிக்கப்பட்டது.

அதில் 2019 பொதுத்தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மற்றும் ஆந்திர மாநில தேர்தலில் ஒரு விளம்பரத்தை 10 லட்சம் பார்வைகளுக்கு கொண்டு சேர்க்க பாஜகவிடம் ரூ.61,584 வசூல் செய்துள்ளது.

ஆனால் , காங்கிரஸ் கட்சியிடம் ரூ.66,250 வசூல் செய்துள்ளது. 2020ல் டெல்லி தேர்தலில் ஒரு விளம்பரத்துக்கு ஆம் ஆத்மி கட்சியிடம் மிக அதிகமாக ரூ.64,174 வசூல் செய்துள்ளது.

அதே சமயம்  பாஜகவிடம் ரூ.35,596 வசூல் செய்துள்ளது. பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா கட்சியிடம் ஒரு விளம்பரத்துக்கு ரூ.66,704 வசூல் செய்த ஃபேஸ்புக் நிறுவனம், பாஜகவிடம் ரூ.37,285 வசூல் செய்துள்ளது

10 தேர்தல்களில் சராசரியாக 10 லட்சம் பார்வையை அடையும் ஒரு விளம்பரத்துக்கு பாஜக ரூ.41,841 செலுத்தியுள்ளது. அதேநேரத்தில் ரூ.53,776 காங்கிரஸ் கட்சி செலுத்தியுள்ளது.

இதன்மூலம் பாஜக மற்றும் எதிர்கட்சிகளிடம் ஃபேஸ்புக் நிறுவனம் வசூல் செய்த தொகையில் பாரபட்சம் காட்டி இருப்பது ஆய்வில் கூறியுள்ளது.